உன் நினைப்பாவே இருக்கு..மறக்க முடியல..அசல் கோலாரை நினைத்து உருகும் நிவாஷினி!
சென்னை : அசல் கோலாரை நினைத்து சாப்பிடாமல்,தூங்காமல் தனிமையில் நிவாஷினி அழுதுக்கொண்டே இருந்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆறாவது சீசனையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.
மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர்கள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

அசல் இருக்கணும்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பான எபிசோடில் ஆசிம், அசல் கோலார், மகேஸ்வரி இந்த 3 பேரும் தான் கடைசி வரை காப்பாற்றப்படாமல் இருந்தனர். முதலில் மகேஸ்வரி எலிமினேட் செய்யப்படவில்லை என கமல் அறிவித்தார். பின்னர் அசல் மற்றும் அசீம் இருவரில் யார் வெளியே போவார்கள் என நிவாஷினியிடம் கமல் கேட்டார். அசல் உள்ள இருப்பாரு.. இருக்கணும்.. என்றார்.

வெளியேறிய அசல்
பின்னர் அசல் எலிமினேட் ஆவதாக கமல் அறிவித்ததுமே, நிவாஷினி கண்கலங்கி அழத் தொடங்கினார். அவரை அசல் வழக்கம் போல் கட்டிப்பிடித்து அசல் தேற்றி, ஏய் அழாதே என்னைப் பாக்கணும் தோனுச்சுனா சீக்கிரமா வெளியில் வா என்று கிண்டலடித்தார். எனக்கு வெளியில் வேலை இருக்கு அந்த வேலையை நான் பார்க்கிறேன். என பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் ஜாலியாகவே அசல் வீட்டை விட்டு வெளியில் சென்றார்.

மறக்க முடியல
அசலின் பிரிவை தாங்க முடியாத நிவாஷினி அழுது அழுது தனியாக புலம்பி வருகிறார். ஏன்டா போன நீ இல்லாமல் என்னல, நீ இல்லாமல் என்னல சாப்பிட முடியல, தூங்க முடியலடா, மறக்க முடியல இந்த 21 நாள்ல நான் காலையில் எழுந்ததும் உன் முகத்தைதான் பார்ப்பேன். இந்த வீட்டில் எத்தனை பேர் இருக்காங்க, அவங்களை யாரையாவது வெளியில் அனுப்பி இருக்கலாமே, அசல் தான் கிடைச்சானா?

கதறி கதறி அழுத நிவாஷினி
இந்த வீட்டில் இருக்கும் யாருக்கும் நம் அன்பு புரியல வெளியல என்று அழுதபடி கேமராவை பார்த்து பேசுகிறார். மேலும், உன் சட்டையை நான் எடுத்து வச்சிக்கிட்டேன், அதைத்தான் போட்டு இருக்கிறேன் வெளியில் வந்ததும், உன்னைப்பார்த்து இந்த சட்டையை வாஷ் பண்ணி தருவேன் என குழந்தை போல அசலை நினைத்து நிவாஷினி அழுது கொண்டே இருப்பதை பார்த்து பார்வையாளர்களும் கொஞ்சம் கலங்கிப் போனார்கள்.


Click it and Unblock the Notifications











