விக்ரமனால் ஒரே அக்கப்போரு..கதறி அழுத ஜனனி.. அதிரடியாக வெளிவந்த ப்ரோமோ!

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது சண்டை, தள்ளுமுடி, அழுகை என வீடே ஒரே களேபரமாக உள்ளது.

வழக்கமான திங்கள்முதல் வியாழன் வரை வீட்டில் பிரச்சனை வெடிக்கும் வெள்ளிக்கிழமை அனைவரும் அமைதியாகி விடுவார்கள். ஆனால், இந்த முறையை வெள்ளிக்கிழமையாகியும் வீட்டுக்குள் ஒருவரை ஒருவர் மல்லுக்கட்டி வருகின்றனர்.

கமல் சொல்வது போல எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று வீடே ரணகளமாக உள்ளது.

ஸ்வீட் பேக்டரி

ஸ்வீட் பேக்டரி

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் வீடு ஸ்வீட் பேக்டரியாக மாறி உள்ளது. இதில், கண்ணா லட்டு திண்ண ஆசை என்று ஒரு டீமின் பேரும், அட தேன்னடை என்ற பெயரில் ஒரு டீமும் செயல்பட்டு வருகின்றனர். இதில், கன்வேயர் பெல்ட்டில் வரும் பெருட்களை எடுக்க ஒருவர் போராடி வருகிறார்.

பெரிய சண்டை

பெரிய சண்டை

நேற்று முன் இந்த டாஸ்கின் போது தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இடையே டாஸ்கின் போது மிகப்பெரிய சண்டை வெடித்தது. இதில், தனலட்சுமி 'டா' சொல்லிவிட்டார் என்று மணிகண்டன் அடிக்கும்படி சென்றார். இதைத்தொடர்ந்து மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இவ்வாறு எதிர்பார்க்காத இரண்டு அணிகளிடம் சண்டை ஏற்பட்டு வீடே சந்தைக்கதை ஆனது.

ஜனனி சிறப்பாக செயல்படவில்லை

ஜனனி சிறப்பாக செயல்படவில்லை

இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில், சிறப்பாக பங்கு எடுத்துக்கொள்ளாத ஒருநபரின் பெயரை கூறும்படி பிக் பாஸ் கூறுகிறார். அப்போது, விக்ரமன் ஜனனி பெயரை கூறி, நீங்க டிபெடென்டா இருக்கீங்க என்கிறார். இதையடுத்து, பேசும் ஜனனி நான் அப்படி இல்லை, ஒரு காரணத்தை சொல்லுங்க என்று கூறுகிறார்.

கதறி கதறி அழுத ஜனனி

கதறி கதறி அழுத ஜனனி

இதையடுத்து, டென்ஷன் ஆன ஜனனி சரி விடுங்க தயவு செய்து ஆர்யூவ்மென்ட் பண்ணாதீங்க என்று கூறி, ஆத்திரத்தில் கையில் வைத்திருந்த தலகாணியை தூக்கி வீசி, இப்போதுமே இப்படித்தான் சொல்றீங்க என்ற குழந்தை போல கை,கால்களை உதைத்துக்கொண்டு அழுகிறார். உடனே அவர் ஆயிஷா கட்டிப்பிடித்து சமாதானம் செய்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ஒரு அழுகாச்சி எபிசோடை பார்க்க தயாராகி விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X