நான் என்ன நேர்ந்து விட்ட மாடா? இரிடேட் பண்ணாதீங்க..மகேஸ்வரியிடம் கொந்தளித்த ஏடிகே!
சென்னை : எப்போதும் சிரித்த முகத்துடன் சுற்றி வரும் ஏடிகே மகேஸ்வரியிடம் கோபத்துடன் கத்தி உள்ளது மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு மாதம் முடிவடைந்த நிலையில், நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்ட பிக் பாஸ் தாறுமாறான டாஸ்க்கை கொடுத்துள்ளார்.
இந்த டாஸ்கால் ஒருவரை ஒருவர் அடித்து புடித்துக்கொண்டு சண்டை போடுவதை, ஜாலியா ரசித்து ரசித்து வேடிக்கை பார்த்து வருகிறார் பிக்பாஸ்.

ரௌடி பேபி தனலட்சுமி
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போனவாரம் தனலட்சுமிக்கு லைட்டா கமல்ஹாசன் ரைடுவிட்டார். இதையடுத்து, இந்த வாரம் அவர் ஒழுங்கா விளையாடுவார் என்று நினைத்தால், மணிகண்டனிடம் ரவுடி போல் சட்டையை மடித்துக்கொண்டு பேய்பிடித்து ஆடும் பிசாசு போல ஒரு ஆட்டம் ஆடினார். மற்ற போட்டியாளர்கள் தடுத்த போதும் அவர் ஆத்திரம் அடங்கவில்லை.

முகமூடியுடன் இருக்கிறார்
இவர்களின் சண்டை ஒருவழியா ஓய்ந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் நல்லவர் என்று முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று ஜனனியிடம் கேட்கப்பட்டது. அப்போது ஏடிகே என்று ஜனனி கூறியிருந்தார். இதைக் கேட்டு ஏடிகே கொந்தளித்தார். இத்தனை நாள் ஒரு தங்கையாக தான் உன்னிடம் நிறைய ஆலோசனை கூறி உள்ளேன். அதை நீ கேவலப்படுத்தி விட்டாய் என ஏடிகே ஆத்திரமடைந்தார்.

இரிடேட் பண்ணாதீங்க
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில் ஏடிகே தங்கச்சி எதையும் நீ மனதில் வெச்சிக்காதே என்று ஜனனியிடம் மன்னிப்பு கேட்கிறார். அப்போது ஜனனி அருகில் இருந்தே மகேஸ்வரி உச்சென்று ஏதோ சொல்ல கடுப்பான ஏடிகே, நான் பேசும் போது மட்டும் உச்சுனு சொல்லுவது இரிடெட்டிங்கா இருக்கு ஏன் அப்படி பண்றிங்க என்று மகேஸ்வரியிடம் சண்டை போடுகிறார்.

எப்போதுமே சண்டையா?
எப்போது பார்த்தாலும் ஏசுவதற்கு, நான் ஒன்னும் நேந்துவிட்ட மாடு இல்லை என்று கூறுகிறார். பதிலுக்கு மகேஸ்வரி, நீங்க யாருக்கும் கிளாஸ் எடுக்காதீங்க என்று சொல்ல இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கின்றனர். சண்டை வந்தால் தான் டிஆர்பி ரெட்டிங் எகிறும் என்பதற்காக எப்போதுமே சண்டையா என பிக் பாஸ் பார்வையாளர்கள் எரிச்சலுடன் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











