கமலிடம் வசமாக சிக்கிய அமுதவாணன்,தனலட்சுமி..சிறப்பான தரமான சம்பவங்கள் வெயிட்டிங்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோவில் அமுதவாணன், தனலட்சுமி கமலிடம் வசமாக சிக்கி உள்ளார்.
இந்த வார லாக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் பிக் பாஸ் வீடு ஸ்வீட் பேக்டரியாக மாறியது. இதில் போட்டியாளர்கள் இரண்டு குழுவாக பிரிந்தனர்.
இதில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற டீமும், அட தேன் அடை என்ற டீமும் 24 மணி நேரமும் இனிப்புகளை தயார் செய்து விற்பனைக்கு அனுப்ப வேண்டும். இரு டீமுக்கும் தனித்தனியாக பொருட்களை பிரிந்து கொடுத்து செய்ய சொல்லி இருக்கலாம்.

தெம்பு இருப்பவன் பிஸ்தா
அப்படி செய்யாமல் கன்வேயர் பெல்டில் வரும் பொருட்களை அடித்துபிடித்து எடுத்து அதன் பிறகு ஸ்வீட் செய்ய வேண்டும் என்பது ரொம்ப ஓவராக இருந்தது. இதனால் கன்வேயர் பெல்டில் படுத்துக்கொள்வது, அடிதடி, சர்ச்சை வாக்குவாதம், தள்ளுமுள்ளு என வீடு சந்தைக்கடையானது. யாருக்கு தெம்பு இருக்கோ அவன்தான் பிஸ்தா என்று விளையாடியது கடுப்பாக இருந்தது.

வேடிக்கை பார்க்கும் பிக்பாஸ்
எது எப்படியோ யார் எப்படி சண்டை போட்டால் நமக்கு என்ன நமக்கு ரேட்டிங் வந்தால் போதும் என்று பிக் பாஸ் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார். ஒரு வழியாக ஸ்வீட் ஃபாக்டரி டாஸ்க் முடிந்தது. இது நமக்குத்தான் இனிப்பான செய்திதான். இந்த டாஸ்கில் நடந்த சண்டை குறித்து இன்று போட்டியாளர்களை வெளுத்து வாங்க இருக்கிறார்.

பர்சனல் அட்டாக் செய்தார்
இந்நிலையில்,பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், அமுதவாணன் அந்த வீட்டில் பர்சனல் அட்டாக் செய்கிறாரா? என்று கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு பலர் ஆம் என்று கூறிய நிலையில், யார் யார் பர்சனல் அட்டாக் செய்கிறார் என்று சொல்லுங்க என்று கமல் கேட்க, எழுந்து நின்ற விக்ரமன், நகைச்சுவை என்ற பெயரில் பர்சனல் அட்டாக் செய்தார். வாயைத் திறந்தாலே பொய் என்று சொன்னது என்னை, பர்சனலாக அட்டக் செய்தது என்றார்.

அடிவாங்குவார்
இதையடுத்து, தனலட்சுமி இங்கு நடந்து கொள்வது போல வெளியில் சென்று நடந்து கொண்டால் பளார் என்று அடிவாங்குவார் என்ற கேள்வி கேட்கப்படுகிறது. இந்த கேள்வியை அசீம் படிக்கும் போது தனலட்சுமியின் முகம் பேய் அடித்தது போல இருந்தது. உண்மையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பலரின் மனதிலும் இதே கேள்வி தான் எழுந்து இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











