நல்லவர் என்ற முகமூடி அணிந்திருக்கும் நபர் யார்?..மணிகண்டனிடம் போட்டு வாங்கும் கமல்!
சென்னை : விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஒரு மாதம் கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்திருக்கிறார்.
இதனால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு நிகழ்ச்சி சண்டையும் சர்ச்சரவுமாக இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் கமல்ஹாசன், மணிகண்டனை போட்டு வாங்கும் படி கேள்வி கேட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 ஜி.பி.முத்து, அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், ஷிவின் கணேசன், மெட்டிஒலி சாந்தி, அசீம், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ரச்சிதா, ராம்,ADK , மகேஸ்வரி, அமுதவாணன், கதிரவன், குயின்ஸி, நிவாசினி, டிக்டாக் தனலட்சுமி, விக்ரமன்,மைனா ஆகியோருடன் தொடங்கியது.

18 போட்டியாளர்கள்
இதில் ஜிபி முத்து, மெட்டி ஒலி சாந்தி, அசல் கோலார், ஷெரீனா ஆகியோர் வெளியேறிய நிலையில் தற்போது வீட்டில் 18 போட்டியாளர்கள் இருக்கிறார்கள் இதில் இந்த வாரம் நாமினேசன் பட்டியலில் அசீம் , விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் ,மகேஸ்வரி பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இதில் இந்த வாரம் ராம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்வீட் பேக்டரியாக மாறிய வீடு
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பேக்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இனிப்புகளை தயார் செய்து விற்பனைக்கு அனுப்பினார்கள். இந்த டாஸ்கிலும் பொம்மை டாஸ்கில் நடந்தது போல கலவரம் வெடித்தது. இறுதியில் கண்ணா லட்டு தின்ன ஆசையா அணி வெற்றி பெற்றது. இந்த வாரம் சிறந்த போட்டியாளராக ரச்சிதா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இவர் நாமினேஷன் லிஸ்டில் இருந்து தப்பித்து விட்டார்.

முகமூடி அணிந்திருக்கும் நபர் யார்
இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், Truth or dare டாஸ்க்கில் நல்லவர் என்ற முகமூடி அணிந்திருக்கும் நபர் யார் என்று கேட்டு மணிகண்டனை வம்பு இழுக்கிறார். இதற்கு பதிலளித்த மணிகண்டன் இதுவரை இந்த வீட்டில் யாரும் அப்படி இல்லை என்று சொல்ல,அடேங்கப்பா... என்று கமல் கிண்டலடிக்கிறார்.

நெட்டிசன்கள் கேள்வி
இதையடுத்து எழுந்த அமுதவாணன், அந்த நபர் மணிகண்டன் தான் என்கிறார். கமல்ஹாசன் மணிகண்டனிடம் இந்த நிகழ்ச்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், விளையாட்டை விளையாட்டாக நினைக்காதீர்கள் என்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ஸ்வீட் பேக்டரி டாஸ்கில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு சண்டை போட்ட நிலையில், கமல் வந்தால் பஞ்சாயத்து இருக்கும் என்று பார்த்தால் என்ன ஜாலியா பேசுறாரு என நெட்டிசன்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











