எப்பவுமே நான் நல்லவனா இருக்க மாட்டேன்...ஹவுஸ்மேட்ஸிடம் சாட்டையை சுழற்றிய கமல்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 34 நாட்களை கடந்து விறுவிறுப்புடன் சுவாரசியமான டாஸ்குகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் சண்டைக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
தற்போது வெளியாகி உள்ள முதல் ப்ரோமோவில் இப்படியே ரூல்ஸை மீறினால் நான் நல்லவனா இருக்க மாட்டேன் என்று சாட்டையை கையில் எடுத்து சுழற்றி உள்ளார் கமல்ஹாசன்.

லக்ஸரி பட்ஜெட்
லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் நடந்த சண்டை குறித்து நேற்று கமல் போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார். ஸ்வீட் பேக்டரி டாஸ்கில் கன்வேயர் வழியாக வரும் பொருட்களை எடுக்க போட்டியாளர்கள் போட்டா போட்டி போட்டனர். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும், முட்டி மோதியும் ஏன் கன்வேயர் பெல்டில் படுத்துக்கொண்டும் அதில் வந்த பொருட்களை எடுத்தனர்.

அடிக்க பாய்ந்த மணிகண்டன்
இந்த டாஸ்கில் தனலட்சுமிக்கும் மணிகண்டனுக்கும் ஒரு யுத்தமே நடந்தது என்று சொல்லும் அளவுக்கு சண்டை நடந்தது. தனலட்சுமி கையில் இருந்த ஸ்வீட் பாக்சை மணிகண்டன் பிடுங்கியதால் ரௌடி பேபியாக மாறிய தனலட்சுமி மணிகண்டனை வா..போடா என்று ஏகவசனத்தில் பேசினார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற மணிகண்டன் அவரை அடிக்க பாய்ந்தார்.

ஒரு வழியாக முடிந்தது
இந்த சண்டை ஒரு புறம் நடக்க கன்வேயர் பெல்டில் வரும் பொருளை எடுத்தபோது மணிகண்டன் தன்னை அடித்ததாக அமுதவாணன் கத்திகூப்பாடு போட்டார். அது மட்டும் இல்லாமல், விக்ரமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு வழியாக சண்டை, சர்ச்சரவுடன் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடந்து முடிந்தது. இதில் அமுதவாணன் டீம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எபிசோடு செம மொக்கை
சனிக்கிழமையான நேற்று கமல்ஹாசன் வந்த நிலையில், இந்த பிரச்சனைகள் குறித்து பேசுவார் என்று பார்த்தால், சீட்டு எழுதிப்போட்டு கேள்வி கேட்டு அதற்கு லைக், டிஸ் லைக் கொடுக்கும் படி கூறினார். இந்த எபிசோடைப் பார்த்த ரசிகர்கள் தனலட்சுமியை வச்சு செய்வார் என்று பார்த்தால், எபிசோடு இப்படி மொக்கையா இருக்கே என்று நொந்துக்கொண்டனர்.

நான் நல்லவனா இருக்க மாட்டேன்
ரசிகர்கள் நொந்துக்கொண்டது ஆண்டவரின் காதில் விழுந்து விட்டது போல தெரிகிறது. இன்றையை எபிசோடிற்கான முதல் ப்ரோமா வெளியாகி உள்ளது. அதில், உங்களின் விழிப்புணர்வுக்காக ஒரு படம் போடுகிறேன் என்று சொல்ல, படத்தை பார்த்துவிட்டு போட்டியாளர்கள் சிரிக்கிறார்கள். இப்போது சிரித்தது போல எப்போதும் சிரித்துக்கொண்டு இருந்தால், நான் நல்லவனாக இருக்க மாட்டேன்.

கண்கலங்கிய தனலட்சுமி
பிக் பாஸ் ஒரு ரூல்ஸ் வெச்சிருக்காரு, ஆனால் யாரும் அந்த ரூல்ஸ்படி விளையாடவில்லை. தனலட்சுமி இந்த வெற்றி உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, நாமினேஷனில் இருந்து நீங்கள் ப்ரீ என்கிற உரிமை பறிக்கப்பட்டு, நியாயமாக விளையாடிய விக்ரமனுக்கு அது கொடுக்கப்படுகிறது என்கிறார். இறுதியாக தனலட்சுமி கண்கலங்கினாலும் ஆறுதல் சொல்லுவது நான், தான் என்கிறார் கமல். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இப்போதே நிகழ்ச்சியை பார்க்க தயாராகி விட்டார்கள்.


Click it and Unblock the Notifications











