போடு தகிட தகிட...வேறலெவல் ப்ரோமோ...கமலை புகழ்ந்து தள்ளும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில் ரூல்ஸை மீறினால் நான் நல்லவனா இருக்க மாட்டேன் என்று போட்டியாளர்களை ஒரு மிரட்டு மிரட்டி உள்ளார் கமல்.
அது மட்டும் இல்லாமல் அடாவடி ரௌடித்தனம், வாக்குவாதம் செய்து தனலட்சுமி டீம் பெற்ற வெற்றியை பறித்து விக்ரமனுக்கு கொடுத்துள்ளார்.
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அடடா ஆண்டவர் தரமான செயலை செய்துவிட்டார் என்று கமலை புகழ்ந்து வருகின்றனர்.

அலட்சியமாக இருக்கீங்க
கமல்ஹாசன் கடந்த வாரமே பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அலட்சியமாக இருப்பதை சுட்டிக்காட்டி எச்சரித்திருந்தார். பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது உங்களுக்கு கொடுக்கும் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்றார். நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யாவிட்டால் நானே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுவேன் என்று எச்சரித்த நிலையில், இந்த வாரம் ஹவுஸ்மேட்ஸை வெச்சு செய்துள்ளார்.

தகிட.. தகிட
போடு.. போடு.. தகிட.. தகிட விக்ரமன் தான் வின்னர், ஆண்டவரே செமயா, தரமா செய்றீங்க இந்த சீசன்ல, விஜய் டிவியிடம் இதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கல, மாஸான ப்ரோமோ, கிடைச்ச வெற்றியை பறித்து நியாயமாக கொடுத்தது செம என ஒரு நெட்டிசன்ஸ் புகழ்ந்துள்ளார்.

இனிமேல் மிக்சர் சாப்பிடுவாரு
விக்ரமனுக்கு சரிக்கு சமமா விளையாடுற அமுதவாணனையும் தனாவையும் விமர்சிக்கிறேன் என்கிற பேரில், அடிச்சு படுக்க வச்சுட்டாரு கமல். இனி அடுத்த வாரம் விக்ரமன் டீம் மிக்சர் கும்பலோட உட்காந்து தாயம் விளையாடுறதை நாம 24 மணி நேரமும் பாக்கலாம். நினைச்சாலே மெய் சிலிர்க்குது. என தனலட்சுமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

வெளியில் அனுப்பிடுங்க
மற்றொரு இணையவாசி இப்படி அந்த பெண்ணை டேமேஜ் பண்றதுக்கு அந்த பொண்ணை எவிக்ட் பண்ணி அனுப்பி விடுங்க...விக்ரமன் நேர்மையானவராக காமிக்க, அடுத்தவங்களை நேர்மை இல்லைனு சொல்ல வேண்டுமா? அதுக்கு பிபி எடுத்த முடிவு விக்ரமன் தான் வின்னர்னு சொல்லி இருக்கலாம். இதில் கமலை டேமேஜ் பண்றாங்க என பதிவிட்டுள்ளார்.

வேறலெவல் ஆண்டவரே
வேறலெவல் ஆண்டவரே,விக்ரமன் உண்மையான விளையாட்டுக்கு சூப்பர் நியாயம், இன்றைய ப்ரோமோ லேட்டா வந்தாலும் பிக் பாஸ் சீசன் 6ன் சூப்பர் ப்ரோமோ என பதிவிட்டு, காமெடியான ஒரு மீம்சையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











