மகேஸ்வரியா? ராமா? இந்த வாரம் வெளியேறுவது யார்? எதிர்பாராததை எதிர்பாருங்கள்!

சென்னை : இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.

ஐந்தாவது வாரம் பேக்டரி டாஸ்க் கொடுக்கப்பட்டு இருந்தது. இதில் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து இனிப்புகளை தயார் செய்து விற்பனைக்கு அனுப்பி இருந்தார்கள்.

அட தேனடை, கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற இரு அணிகளும் விறுவிறுப்பாக விளையாடியிருந்தார்கள்.

நாமினேஷனில் 5 பேர்

நாமினேஷனில் 5 பேர்

இந்த டாஸ்கில் கண்ணா லட்டு தின்ன ஆசையா அணி வெற்றி பெற்றது. இந்த வாரத்தின் சிறந்த போட்டியாளராக ரச்சித்தா தேர்ந்தெடுக்கப்பட்டதால் அவர் நாமினேஷன் லிஸ்டில் இருந்து தப்பித்து விட்டார். இதனால், இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் அசீம் , விக்ரமன், ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் , மகேஸ்வரி ஆகியோர் இருக்கிறார்கள்.

விக்ரமன் காப்பாற்றப்பட்டார்

விக்ரமன் காப்பாற்றப்பட்டார்

சனிக்கிழமையான நேற்று கமல்ஹாசன் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் நடந்த பிரச்சனைகளை பற்றி போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார். இதையடுத்து, அதிக வாக்குகள் பெற்ற விக்ரமன் காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். இரண்டாவதாக அசீம் சேவ் செய்யப்பட்ட நிலையில் ஏடிகே, ஆயிஷா, தனலட்சுமி, ராம் ,மகேஸ்வரி ஆகியோர் டேன்ஜர் ஜோனில் இருக்கிறார்கள்.

பீதியை கிளப்பிய கமல்

பீதியை கிளப்பிய கமல்

இதையடுத்து, 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், கமல் எவிக்ஷன் கார்டுடன் நடந்து வருகிறார். இதில் யார் சேவ் ஆவார்கள் என்று நினைக்கிறீர்கள் என்று கமல் கேட்கிறார். இதில் பலர் மகேஸ்வரி தான் காப்பாற்றப்படுவார் என்று கூறுகின்றனர். இதையடுத்து, பேசிய கமல் சில நேரத்தில் உங்களுடைய கணக்கு சரியாக இருக்கு, பல நேரத்தில் இல்லை என்று பீதியை கிளப்புகிறார்.

எஸ்கேப் ஆகிய ராம்

எஸ்கேப் ஆகிய ராம்

இதில் குறைந்த வாக்குகளை பெற்று விஜே மகேஸ்வரி வெளியே உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ராம் இந்த வாரம் வெளியேறுவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் இந்த வாரம் எஸ்கேப் ஆகிவிட்டாராம். இனி மேல் தொடர்ந்து அவர் வீட்டில் மிக்சர் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார் என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X