நல்லவளா நடிக்கும் தனம்..சிரிச்சிக்கிட்டே ஊசி குத்தும் ரச்சிதா.. போட்டியாளரின் முகத்திரை கிழிந்தது!
சென்னை : அக்டோபர் 9ந் தேதி மிகவும் கோலாகலமாக பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. தற்போது 35 நாட்களாகி உள்ள நிலையில், ஒவ்வொரு போட்டியாளரின் உண்மை முகத்திரையும் கிழிந்து வருகிறது.
21 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில் ஜிபி முத்து,சாந்தி, அசல் கோலார், ஷெரீனா ஆகியோர் வெளியேறியதால், தற்போது வீட்டில் 18 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த வாரம் நாமினேஷனில் விக்ரமன்,அசீம், மகேஷ்வரி, கதிரவன்,ராம், ரச்சிதா ஆகியோர் உள்ளார். இதில் இந்த வாரத்தில் ரச்சித்தா சிறப்பாக செயல்பட்டதால் அவர் நாமினேஷனிலிருந்து தப்பித்தார்.

போட்டியாளர்களை பதறவிட்ட கமல்
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் ரூல்ஸை மீறினால் நான் நல்லவனாக இருக்க மாட்டேன் என்று போட்டியாளர்களை மிரட்டி உள்ளார் கமல். அது மட்டும் இல்லாமல் அடாவடி ரௌடித்தனம், வாக்குவாதம் செய்து தனலட்சுமி டீம் பெற்ற வெற்றியை பறித்து விக்ரமனுக்கு கொடுத்துள்ளார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் அடடா ஆண்டவர் தரமான செயலை செய்துவிட்டார் என்று கமலை புகழ்ந்தனர்.

நல்லவளா நடிக்கும் தனம்
தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், இவர் என் கூட இருந்தால் உள்ளதும் போய்விடும் என்று கமல் கேட்கிறார். இதையடுத்து வரும் ஜனனி, தனலட்சுமியின் போட்டோவில் குத்தி, நல்லவள் மாதிரி பழகுவாங்க ஆனால், எப்போ எப்படி மாறுவாங்கனு தெரியவில்லை என்கிறார். இதையடுத்து வரும் ராமும் தனலட்சுமி போட்டோவில் ரெட் ஸ்டாம்பை குத்துகிறார்.

மோசமான விமர்சனம்
அடுத்ததாக வரும் அசீம், சிரிச்சிக்கிட்டே ஊசி குத்துகிறார் என்று கூறிக்கொண்டே ரச்சித்தாவின் போட்டோவில் குத்துகிறார். அதே போல ரச்சித்தாவும், 6வது வாரத்தில் இருந்து என்னுடைய உண்மையான முகத்தை அசீம் காட்டுவேன் என்று சொல்லி இருக்கிறார் என்று கூறுகிறார். இப்படி ஒவ்வொரு போட்டியாளரும் முகத்திற்கு நேரே ஒருவரை ஒருவர் மோசமாக பேசி வருகிறார்கள்.

விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள், பிக் பாஸ் வீட்டில் யாரும் யாருக்கும் நண்பர்கள் இல்லை, ஒவ்வொரு வரும் வேறு ஒரு முகத்திரையுடன் வீட்டில் சுற்றி வருகிறார்கள். நாட்கள் போக போக முகத்திரையுடன் அலையும் பல உண்மையான முகங்கள் தெரியும் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











