அசீமின் மாற்றத்தால் கிடைத்த வரவேற்பு..பொறாமையால் புழுங்கும் மைனா-ஆயிஷா!
சென்னை : பிக் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் மைனா மற்றும் ஆயிஷா இருவரும் அசீமின் மாற்றத்தை நினைத்து கிண்டலடித்து சிரித்து பேசி வருகின்றனர்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது 35 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் இதுவரை 5 பேர் வெளியேறிவிட்டதால் 16 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதுவரை சாந்தி, அசல் கோளாறு, செரினா மற்றும் மகேஸ்வரி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். ஜிபி முத்து தானாக வெளியேறினார்.

பிக்பாஸ் சீசன் 6
பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி வாரந்தோறும் ஒருவர் போட்டியாளரை எலிமினேட் செய்யப்படுவது வழக்கம். வீட்டில் உள்ள ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுக்கும் நாமினேஷன் பட்டியலை வைத்து போட்டியாளர்களில் மக்கள் யாருக்கு குறைவான வாக்குகள் அளிக்கிறார்களோ அதன் அடிப்படையில் இந்த எலிமினேஷன் நடைபெறும். அந்த வகையில் குறைந்த வாக்குகளை பெற்றதால் மகேஸ்வரி நேற்று வெளியேறினார்.

இரண்டாவது ப்ரோமோ
இந்நிலையில்,பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், அசீம் சாப்பிட்டுக்கொண்டு இருக்க மைனாவும் நந்தினியும் அசீமை கிண்டலடித்து பேசுகிறார்கள். அப்போது, ஆயிஷா அசீம் திடீர் திடீரென மாறிவிடுகிறார். இவர் மாறுவதை பார்க்கும் போது நமக்கே சிரிப்பா வருகிறது என்கிறார்.

அசீம் நல்லா நடிக்கிறார்
அப்போது குறுக்கிடும் மைனா, டக்குனு யாராலையும் திருந்த முடியாது. திருந்துவது போல நடிக்கிறார். சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால் அப்படியே மாறிவிடுகிறார். இவர் இப்படி இருப்பது நமக்கு நல்லது தான் எதுவா இருந்தாலும் இவர் பெயரை சொல்விட்டு போய்விடலாம் என்று அயிஷா மற்றும் மைனா இருவரும் அசீமை வெச்சு செய்து பேசி உள்ளனர்.

வசமா சிக்கிய தனலட்சுமி
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் இந்த வாரம் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்படுவதற்கான போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை நாமினேஷன் செய்து வருகின்றனர். அதில் பலர் ஜனனி மற்றும் தனலட்சுமியை நாமினேஷன் செய்திருக்கின்றனர். ஒரு சிலர் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த முறை நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் பெயரையும் கூறி இருக்கின்றனர். அந்த வகையில் இந்த வாரத்திற்கான தனலட்சுமி, ஜனனி சிக்கி உள்ளவர்கள்.


Click it and Unblock the Notifications











