தனலட்சுமியிடம் வசமாக சிக்கிய ஷிவின்..க்ரிஞ்ச் தனமா இருக்கே..ப்ரோமோ பார்த்து கடுப்பான ரசிகர்கள்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் தனலட்சுமியிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார் ஷிவின்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் விதவிதமான டாஸ்குகள் கொடுக்கப்படும். பொம்மை டாஸ்க், ஸ்வீட் ஃபேக்டரி டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு கடந்த வாரம் வீடே களேபரமானது.
இந்த வாரத்திற்கான டாஸ்க்காக ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக மாறி உள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசராக ராபர்ட் மாஸ்டர், அரசியாக ரச்சிதா, தளபதியாக அசீம், ராஜ குருவாக விக்ரமன், இளவரசராக மணிகண்ட ராஜேஷ், இளவரசியாக ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கொந்தளித்த விக்ரமன்
இந்த டாஸ்கிற்காக போட்டியாளர்கள் மூன்று அணிகளாக பிரிந்து விளையாடி வருகிறார்கள். நேற்றையை எபிசோடில் ராஜ குருவாக வேடம் அணிந்த விக்ரமனுக்கு சண்டை முட்டிக்கொண்டது. விக்ரமனை பார்த்து எச்சில் துப்பிய உணவை உண்ணுங்கள் என அசீம் சொன்னதால், எரிமலையாக பொங்கி எழுந்தார் விக்ரமன். அடித்து கொள்ளாத குறையாக இருவரும் கைநீட்டி வாக்குவாதம் செய்தனர்.

கேவலமானது தெரியுமா?
இதையடுத்து காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், ஏடிகே சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒன்று அசீம் சொல்ல கோபமான ஏடிகே இந்த மாதிரி சாப்பிடும்போது வந்து நீ பேசறது, கேவலமானது தெரியுமா? இத விட அசிங்கமானது வேறு எதுவும் கிடையாது என்று கூறுகிறார். அதற்கு அசிங்கம், கிசிங்கம் என்று எல்லாம் நீ பேசாத என அசீம் பேசுகிறார். நேற்றைய சண்டை பஞ்சாயத்தை இன்றைக்கும் ஆரம்பித்துள்ளார் அசீம்.

க்ரிஞ்சா இருக்கு
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், ஷிவின் அரிசி டப்பாக்குள் நகைகளை ஒளித்து வைக்கிறார். இதை மறைந்திருந்த தனலட்சுமி பார்த்து ராஜா, ராணியிடம் முறையிடுகிறார். இதையடுத்து ஒளித்து வைத்த நகை கைப்பற்றப்படுகிறது. இந்த ப்ரோமோ பார்ப்பதற்கு திருடன் போலீஸ் விளையாட்டு போல க்ரிஞ்சாக உள்ளது என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

எங்கே இடிக்கிறது
மேலும் இந்த ப்ரோமோவை பார்த்த ஒரு ரசிகர், அசீமும் தனலட்சுமியும் உள்ளே இருப்பதால் டிஆர்பி வேண்டுமானால் ஏரலாம்... பார்வையாளர் குடும்பங்களில் ஒரு வித எரிச்சல்தான் வருகிறது.. மக்களை, சமூகத்தை பிரதிபலிக்கிறதாக வெளியே சொல்லிக்கொண்டு,உள்ளே இருப்பவர்கள் வார்த்தைக்கு வார்த்தை இது game, game என்று சொல்லும் போது எங்கோ இடிக்கிறது என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











