தேவதாஸ் ரேஞ்சுக்கு பீலிங்...நீங்க இரண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி இல்லை..விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவை பார்த்து நெட்டிசன்கள் கண்டமேனிக்கு ராபர்ட் மாஸ்டரை திட்டி வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் டாஸ்குகள் வித்தியாசமாகவே இருக்கும். எப்படிடா இந்த டாஸ்க்கை யோசித்து இருப்பாங்கணு பல நேரம் நினைக்கும் அளவுக்கு க்ரிஞ்சா இருக்கும்.

பொம்மை டாஸ்க், ஸ்வீட் பேக்கரி டாஸ்க் என எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் சண்டையை மூட்டிவிடுவதை பிக் பாஸ் கனகச்சிதமாக செய்து வருகிறார்.

ராஜ வம்சமும் அருங்காட்சியகமும்

ராஜ வம்சமும் அருங்காட்சியகமும்

இந்த வாரத்திற்கான டாஸ்க்காக ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக மாறி உள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அரசராக ராபர்ட் மாஸ்டர், அரசியாக ரச்சிதா, தளபதியாக அசீம், ராஜ குருவாக விக்ரமன், இளவரசராக மணிகண்ட ராஜேஷ், இளவரசியாக ஜனனி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேம்பி தேம்பி அழும் ராபர்ட்

தேம்பி தேம்பி அழும் ராபர்ட்

இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில், ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் டாஸ்கில் அனைவருக்கும் தெரியாத சில உண்மைகள் என்று பிக் பாஸ் கூறி, கதிரவன் தான் ராஜா என்ற உண்மை தெரிய வருகிறது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராபர்ட் மாஸ்டர் கண்கலங்கி விடுகிறார். இத்தனை நாள் நானும், ரச்சித்தாவும் ராஜா,ராணியா இருந்துவிட்டோம். ஆனால், இனிமேல் என கூறி தேம்பி தேம்பி அழுகிறார். அவரை ஏடிகே சமாதானப்படுத்துகிறார்.

தேவதாஸ் ரேஞ்சுக்கு பீல் பண்ணுராரே

தேவதாஸ் ரேஞ்சுக்கு பீல் பண்ணுராரே

இந்த ப்ரோமோவில் ராபர்ட் மாஸ்டர் கண்கலங்கி பீல் பண்ணதை பார்த்து கடுப்பான ஒரு நெட்டிசன்ஸ், என்னடா இது ...மாஸ்டர் தேவதாஸ் ரேஞ்சுக்கு பீல் பண்ணுராரே என பதிவிட்டுள்ளார்.

நிஜமான ராணி இல்லை

நிஜமான ராணி இல்லை

ராஜா-ராணி கேரக்டர்ல இருக்கதுனால நிஜமாவே ராணினு நினைச்சிட்டான் இந்த கிறுக்கன்.டாஸ்க்ல அவளுக்கு கொடுத்த வேலை அத பண்ணி ஆகனும்.நிஜ வாழ்க்கையில துரோகம் பண்ற மாதிரி பீல் பண்றான்.ரச்சிதா இதுக்கு அப்புறமாவது ராபர்ட் தெளிவா சொல்லாம விட்டா அவன யூஸ் பண்றானு அர்த்தம்.என்று ஒரு நெட்டிசன்ஸ் பதிவிட்டுள்ளார்.

தேவையில்லாத ரியாக்ஷன்ஸ்

தேவையில்லாத ரியாக்ஷன்ஸ்

மற்றொரு இணையவாசி ராபர்ட் மாஸ்டர் இது தேவையில்லாத ரியாக்ஷன்ஸ். என்னமோ ராணி உன்னுடைய உண்மையான மனைவி மாதிரி பீல் பண்றீங்க. நீங்க பண்றது எல்லாம் ரொம்ப ஓவரா இருக்கு என்றும், இது ஒரு கேம் ஷோ இந்த கேமில் கவனமாக விளையாடுங்க, அதைவிட்டுவிட்டு சின்னப்பிள்ளை தனமாக நடந்துக்காதீங்க என்றும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X