ஏமாற்றிய ரச்சித்தா..தேம்பி அழும் ராபர்ட் மாஸ்டர்..பிக்பாஸ் வீட்டில் புது ட்விஸ்ட்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் சீசன் 6, 40 நாட்களை எட்டியிருக்கிறது. ஏறத்தாழ நிகழ்ச்சி பாதியை எட்டிவிட்டது. இதில் சண்டை சச்சரவுக்களுக்கு பஞ்சமில்லை என்று சொல்லும் அளவுக்கு தினமும் ஒரு சண்டை நடந்து வருகிறது.
விக்ரமன், அசீம், தனலட்சுமி ஆகியோர் வீட்டில் நாள்தோறும் ஏதாவதொரு தகராறில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்கிறது.

அசர் கோலார்
அசல் கோலார் வீட்டை விட்டு போனதற்கு பிறகு வீட்டில் இருக்கும் ஒரே எண்டர்டெமெண்ட ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா தான். ராபர்ட் மாஸ்டர் செய்யும் ரொமான்ஸ் பார்ப்பதற்கு க்ரின்சாக உள்ளது. நிகழ்ச்சி தொடக்கத்திலேயே ரச்சிதாவிடமே, நீங்கள் என்னுடைய கிரஷ் என கூறி அவர் பின்னால் சுற்றி வருகிறார் ராபர்ட் மாஸ்டர்.

விலகி செல்லும் ரச்சிதா
ரச்சித்தா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஜாலியாக இருந்தார். ஆனால் நாட்கள் போக போக ராபர்ட் மாஸ்டரின் செயல் அவருக்கு பிடிக்காமல் போனதால், அவரிடமே வெளிப்படையாக நீங்கள் செய்வது சரியில்லை என்றும் இயல்பாக இருங்கள் என்று அறிவுரை கூறினார். ஆனால், ராபர்ட் திருந்தாததால், ரச்சிதா விலகிச் செல்ல ஆரம்பித்துள்ளார்.

ராபர்ட் மாஸ்டருக்கு ஆப்பு
தற்போது ராஜா ராணி டாஸ்கில் கூட ராபர்ட் ராஜாவாகவும், ரச்சிதா ராணியாகவும் இருந்தனர். இந்த டாஸ்கை சாக்காக வைத்து ராபர்ட் மாஸ்டர் வீட்டிற்குள் ஜாலியாக அலப்பறை கொடுத்துக்கொண்டு இருந்தார். இதையடுத்து, இன்று ராபர்ட் மாஸ்டருக்கு ஆப்பு வைக்கும் வகையில், கதிரவனை ராஜாவாக ஆக்கி உள்ளார். இதனால் ராபர்ட் மாஸ்டர் கண்ணீர் விட்டு அழ, அவரை ஏடிகே தேற்றுகிறார்.

எல்லாரும் ஏமாத்திட்டீங்க
இதையடுத்து, தற்போது மூன்றாவது ப்ரோமோவில் ராபர்ட் மாஸ்டர் அழுது கொண்டு இருக்கும் போது எல்லோரும் சமாதானப்படுத்துகின்றார்கள். ரச்சிதா வந்தும் பேசியும் கேட்காத ராபர்ட் எல்லாரையும் நம்பினேன் எல்லாரும் ஏமாத்திட்டாங்க எனக் கூறி தேம்பி தேம்பி அழுகின்றார். அப்போது சமாதானப்படுத்த வந்த ரச்சிதாவை யாரும் என்னிட்ட பேசாதீங்க எனக் கூறியதும் கோபத்தில் அவரும் எழுந்து செல்கின்றார்.


Click it and Unblock the Notifications











