அசீமுக்கு தகுதியே இல்லை..சண்டை மட்டும் தான் போட்டார்..கமல் முன் வசமாக சிக்கிய அசீம்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் அனைத்து போட்டியாளர்களும் ரவுண்டு கட்டி அசீமை கமலிடம் வசமாக சிக்க வைத்துள்ளனர்.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது ஆறாவது வாரம் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 20 பேர் கலந்து கொண்ட நிலையில், ஒரு வாரம் கழித்து மைனா நந்தினி வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்தார்.

விறுவிறுப்புடன்
பிக் பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பல மாற்றங்களை பிக் பாஸ் குழு கொண்டு வந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ஜிபி முத்து, மெட்டி ஒலி சாந்தி, அசல், ஷெரினா, மகேஷ்வரி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

முருங்கை மரம் ஏறிய அசீம்
நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே சண்டைக்கு பிள்ளையார் சுழி போட்டோர் அசீம். ஆயிஷா மற்றும் விக்ரமனை ஒருமையில் பேசி கமலிடம் வாங்கி காட்டிக்கொண்டார். அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பாமல் அட்வைஸ் கொடுத்தார். இதையடுத்து, இரண்டு வாரமாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த அசீம் மீண்டும் முருங்கை மரம் ஏறினார்.

இந்த வார டாஸ்க்
இந்த வாரம் ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால், பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக மாறியது. இதில் ஹவுஸ்மேட்டுகள் மூன்று அணிகளான பிரிந்து விளையாடி வந்தனர். இதில் படைத்தளபதியாக அசீம் இருந்த நிலையில் ராபர்ட் மாஸ்டர், ரச்சித்தாவிடம் சண்டை போட்டார். அது மட்டும் இல்லாமல் ஏடிகேவிடமும் சண்டை போட்டோர்.

தகுதியே இல்லாதவர்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ இன்று சனிக்கிழமை என்பதால் தாமதமாக வெளியானது. அதில், தன் பதவிக்கு தகுதியே இல்லாமல் நடந்து கொண்டது யார் என கமல் கேட்க, முதலாவதாக எழுந்த விக்ரமன், படைத்தளபதி அசீமை சொல்கிறேன். அதிகாரம் செய்வதும், கழுத்தில் கத்தியை வைப்பது மட்டுமே படைத்தளபதியின் வேலை இல்லை என்றார்.

வசமாக சிக்கிய அசீம்
அவர் பேசிய விதம் ரொம்ப, தோரணை அனைத்தும் அதிகாரத்தனமாக இருந்தது என்று ஏடிகே சொல்ல, அடுத்து எழுந்த ஆயிஷா, அவர் முழுக்க முழுக்க கேரக்டராகவே இல்லை ரொம்ப பர்சனலாத்தான் இருந்துச்சு சண்டை மட்டும்தான் போட்டாரு என்று அனைத்து போட்டியாளர்களும் ரவுண்டு கட்டி அசீமை கொத்தாக கமல்ஹாசனிடம் சிக்க வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











