ஆசீம் சண்டை போடுவார்..விக்ரமன் நியாயத்தை கேட்பார்..சத்தமே இல்லாமல் சண்டையை மூட்டிவிட்ட பிக்பாஸ்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் முந்தைய சீசன் போல் இல்லாமல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ஜிபிமுத்து, மெட்டி ஒலி சாந்தி, அசல் கோலார் வெளியேறிய நிலையில் தற்போது 18 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.

தற்போது இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில் அசீம் மற்றும் தனலட்சுமிக்கும் இடையே காரசாரமான விவாதம் நடந்துள்ளது.

அந்த டிவி..இந்த டிவி

அந்த டிவி..இந்த டிவி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது வாரம் முடிந்து நான்காவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. காலையில் வெளியான முதலாவது ப்ரோமோவில் பிக் பாஸ் வீடு இந்த வாரம் முழுக்க டிவி சேனலாக இருக்கும் என்றார். சேனலின் பெயர் அந்த டிவி, இந்த டிவி இதில் இரண்டு சேனல்களாகப் பிரிந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குமாறு கூறியிருந்தார் பிக்பாஸ். இதில் ஒரு நிகழ்வாக ராசி பலன் சொல்லுதலும், மற்றொரு நிகழ்வாக விவாதமும் இடம்பெறுகின்றது.

விக்ரமன் நியாயத்தை கேட்பார்

விக்ரமன் நியாயத்தை கேட்பார்

இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் ஷிவின் இந்த வீட்டை என்டர்டைன்மெண்டாக வைத்திருப்பது அசீம் தான்... பெரும்பாலான தலைப்புகளில் அவரின் பெயர் அடிபட்டுள்ளது என்கிறார். இதையடுத்து, தனலட்சுமி பேசுகையில், சண்டையை மட்டும் ஒரே ஆளாக பண்ணிட்டு இருப்பது அசீம் தான், நியாயத்தை மட்டுமே கேட்டுக்கொண்டு இருப்பது விக்ரமன் எனக் கூறியிருக்கின்றார். இதற்கு பதிலுக்கு அசீமும், யார் என்ன சொன்னாலும், வேண்டும் என்று இந்த வீட்டில் சண்டை போடுபவர் தனலட்சுமி தான் என்றார்.

சூடான விவாத மேடை

சூடான விவாத மேடை

இதையடுத்து, விக்ரமன், அசீம், ஷிவின், தனலட்சுமி இடையே விவாதம் தொடங்குகிறது. என்ன மாதிரி டாஸ்க் கொடுத்தா வீடு பத்திக்கிட்டு எரியும் என்பது நன்றாக தெரியும் என்பதால் அதற்கு ஏற்ற மாதிரி டாஸ்க்கை ரூம் போட்டு யோசித்து கொடுத்துள்ளனர். இதுவும் விவாத மேடையில் தனலட்சுமி,விக்ரமன், ஷிவின், அசீமை ஏற்றிவிட்டு அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள் போட்டியாளர்கள். அப்போ இன்னைக்கு என்டர்டைன்மெண்ட் இருக்கு.

விக்ரமன் தெளிவான ஆளு

விக்ரமன் தெளிவான ஆளு

இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலர் ஷிவின் அசீமுக்கு சப்போர்ட் பண்றாங்க, தனலட்சுமி, விக்ரமனை சப்போர்ட் பண்றாங்க திடீர் என்று வீடே இப்படி மாறி போச்சே. ஆனால்,ஒன்று விக்ரமன் தெளிவா யோசிச்சிட்டு உள்ளே போயிருக்கார். எப்படி நடந்துக்கணும் எப்படி பேசணும்.அவருக்கு நல்ல தெரியும், அவருக்கு டஃப் கொடுக்கிற ஆள் இப்போதைக்கு பிக் பாஸ் உள்ள இல்ல. அதைவிட நல்லா நடிக்கிற ஒரு ஆள் வந்தால் விக்ரமன் கதை க்ளோஸ் என பதிவிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X