உங்க இஷ்டத்துக்கு இங்கே இருக்க முடியாது..அசீமை வறுத்தெடுத்த கமல்.. இன்று ஆப்பு கன்ஃபார்ம்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோவில் அசீமை கமல் வறுத்தெடுத்து வருகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், கமல்ஹாசன் க்ரே நிற சூட் கோட்டில் மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார்.
நேற்று கருப்பு மற்றும் வெள்ளை நிற டி ஷர்ட்டில் மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் வந்தது போல ஸ்மார்ட் லுக்கில் வந்திருக்கிறார்.

கிண்டலடித்த கமல்
நேற்றைய நிகழ்ச்சியில் ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்கின் போது நடந்த சுவாரசியம் குறித்தும் சண்டை குறித்தும் ஒவ்வொருவரிடமும் கேட்டு தெரிந்து கொண்டார். அமுதவாணனிடம் வில்லுப்பாட்டு பாட சொல்லி கேட்டு ரசித்தார். செந்தமிழில் பேசுகிறேன் என்று சிறுநீர் கேட்டதை சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார்.

தகுதியே இல்லாதவர்
இதையடுத்து, இந்த ராஜவம்சம் டாஸ்கில் யாருக்கு இந்த பதவி தகுதியே இல்லை என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்டதும், முதல் ஆளாக எழுந்த விக்ரமன், படைத்தளபதி தான் அந்த பதவிக்கு தகுதியே இல்லாதவர் என்றார். அதிகாரமும் கத்தியை வைத்து மிரட்டுவதும் மட்டுமே படைத்தளபதி வேலை இல்லை, ராஜாவை பாதுகாப்பதுதான் படைத்தளபதி வேலை என்றார்.

குற்றம்சாட்டிய போட்டியாளர்கள்
அதேபோல, தனலட்சுமியும் இவ்வளவு நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்ப என்ன பண்றேன் பாருங்கள் என்பது போல நடந்து கொண்டதாக கூறினார். ஆயிஷாவும் அசீம் கதாபாத்திரத்தை மறந்து விட்டு, அவர் இஷ்டத்திற்கு இருந்தார் என்றார். இவர்கள் மட்டும் இல்லாமல் பல போட்டியாளர்கள் அசீம் மீது குற்றம்சாட்டினார்கள்.

இது தான் என்னுடைய ஸ்ட்டாடர்ஜி
இதையடுத்து இன்றைய நிகழ்ச்சிக்கான முதலாவதாக வந்திருக்கும் ப்ரோமோவில் இது தான் என்னுடைய ஸ்ட்டாடர்ஜி என்று முடிவு பண்ணிட்டீங்கனா? நான் மற்றவர்களை எல்லாம் 'வார்ன்' பண்ணிடுவேணு சொன்னேன். அதற்கு முதல் இரையானது ஏடிகே லாபோ..திபோனு கத்தி கோர்ட்டை கழட்டி கீழே போடும் போது கூட,சரி..சரி கோச்சிக்காத நான் தான் எடுத்துவைத்தேன் என்று சொல்லி இருக்கணும் விளையாட்டுனா அப்படித்தான் இருந்து இருக்க வேண்டும் என்று அசீமிடம் கேட்கிறார் கமல்.

கோபத்தில் கத்திய கமல்
இதையடுத்து பேசும், அசீம், போன வாரம் ஒதுங்கி இருந்ததால் ஃப்யரா இல்லையோணு தோணுச்சி சார் அதான் இப்படி செய்தேன். எனக்கு எப்படி விளையாடுவது என்றே தெரியவில்லை சார் என்கிறார். அசீமின் பதிலால் கடுப்பான கமல்,என்ன பேசிட்டு இருக்கீங்க, நீங்க நினைச்சபடியெல்லாம் இங்கே நடக்கும்னு நினைக்காதீங்க என கடுமையான கோபத்துடன் அசீமை வறுத்தெடுத்துள்ளார் கமல்.


Click it and Unblock the Notifications











