வருங்கால பூமர் அங்கிள்…மீம்ஸ் போட்டு அசீமை பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவில் நீங்க நினைச்சபடியெல்லாம் இங்கே நடக்கும்னு நினைக்காதீங்க என கடுமையான கோபத்துடன் அசீமை திட்டி உள்ளார் கமல்.
ராஜ வம்சம் டாஸ்கின் போது விக்ரமனிடம் மிகவும் மோசமான முறையில் அசீம் பேசியதை குறித்து கமல் இன்று விளாசுவார் என்பது இந்த ப்ரோமோவை பார்க்கும் போது தெரிகிறது.
இருப்பினும், வாரா வாரம் கமலிடம் வாங்கிகட்டிக்கொள்ளும் அசீமை மீம்ஸ் கிரியேட்டர்கள் வெச்சு செய்து வருகின்றனர்.

அட போங்க சார்
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், இவ்ளோவும் பண்ணிட்டு அசீம் நீங்க சேஃவ்ன்னு சொன்னா, அப்போ அசீம் பண்றது தான் சரி என்று மக்களுக்கு அதான் புடிக்குதுன்னு நினைச்சி ஒட்டுமொத்த ஹவுஸும் அசீம் பக்கம் போய்டுவாங்க. அப்புறம் பாக்கவே கேவலமா இருக்கும். நியாயம் பேசுறவன் கேவலமா நடத்த படுவான்.. இதான் இந்த சீசன்ல நடக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

வருங்கால பூமர் அங்கிள்
அசீம் வெரி எமோஷனலா இருக்காரு. பார்த்து என் கண்ணே கலங்கிடுச்சு. வருங்கால பூமர் அங்கிள்களின் நம்பிக்கை நட்சத்திரம் என அசீம் கதறி அழுவது போல ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார்.

சரியான நெருப்படி
பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ இன்று சனிக்கிழமை என்பதால் தாமதமாக வெளியானது. அதில், அசீம் கமல் சார் கிட்ட சனிக்கிழமை வாங்குன செருப்படியே போதும். இனிமேல் நெகடிவ் தாட்ஸ் இல்லை, ஒன்லி பாசிடிவ் வைப் தான் என ஒரு மீமை போட்டுள்ளார்.

சேஃவ்னு சொல்லுவீங்க
அசீமை முதல் வாரத்திலேயே ரெட் கார்டு கொடுத்து அனுப்பி இருக்கணும் ஒவ்வொரு வாரமும் அறிவுரை மட்டுமே சொல்லிக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டிய ஒரு நெட்டிசன்ஸ், நீங்க நினைப்பது நடக்காதுனு சொல்லிட்டு மீண்டும் நீங்க சேஃவ்னு சொல்லுவீங்க என்று கூறியுள்ளார்.

பரிதாபமாக இருக்குல
கமல்ஹாசனிடம் வாரா வாரம் வாங்கி கட்டிக்கொண்டு இருக்கும் அசீமை பார்த்து, இவர் நிலைமையை நினைக்கவே பரிதாபமா இருக்குல என வடிவேலு அடிவாங்கும் போட்டோவை மீம்ஸாக போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











