இதெல்லாம் ஒரு ப்ரோமோவா?.. செம மொக்கையா இருக்கு..கடுப்பான பிக் பாஸ் ரசிகர்கள்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் இதெல்லாம் ஒரு ப்ரோமோவா? என கேட்டு வருகின்றனர்.
பிக் பாஸ் ரசிகர்களுக்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் ஜாலியோ ஜிம்கானாத்தான். கமல்ஹாசனைப் பார்க்கவும் அவர் கொடுக்கும் கவுன்ட்டரை கேட்கவும் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருப்பார்கள்.
இதனால், மற்ற நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் டிவி முன் ஆஜராகி விடுவார்கள்.

சுவாரசியமாக
கடந்த 6 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வருகிறார். இதில் முதல் சீசன் மற்றும் மூன்றாவது சீசன் டிஆர்பி பிச்சிக்கிட்டு போனது. அதில் குறும்படம், மருத்துவ முத்தம் என நிகழ்ச்சியை மிகவும் சுவாரசியமாக கொடுத்து இருப்பார் கமல். பிக் பாஸ் வெற்றிக்கு கமலின் தரமான கருத்துதான் காரணமாக இருந்து வருகிறது.

வெளுத்து வருகிறார்
ஆனால், போன சீசனில் கமல் சரியாக எந்த கருத்தையும் சொல்லவில்லை என்றும், விஜய் டிவிக்கு ஒத்துஊதியது போல, மழுப்பலாக பேசுகிறார் என ரசிகர்கள் பல குற்றச்சாட்டுகளை வைத்தனர். இதனால், பிக் பாஸ் ரசிகர்கள் கமல்ஹாசன் மீது அதிருப்தியில் இருந்தனர். ஆனால், இந்த சீசனில் போட்டியாளர்களை சும்மா வெளுவெளு என வெளுத்து வருகிறார்.

தரமான சம்பவம்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில் கமல் அசீமிடம் இது தான் என்னுடைய ஸ்டேடர்ஜி என்று முடிவு பண்ணிட்டீங்களா? என்றும் உங்கள் இஷ்டத்திற்கு இங்கே இருக்க முடியாது என கோபத்தில் அசீமை திட்டுவது போல ப்ரோமோ வெளியாகி இருந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என்று நிகழ்ச்சி பார்க்க தயாரானார்கள்.

மொக்கை ப்ரோமோ
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் யார் வில்லாளி...யார் எய்யப்பட்ட அம்பு என்று கேட்கிறார் கமல், அப்போது ஷிவின் அமுதவாணன் வில், ஜனனி எய்யப்பட்ட அம்பு என்கிறார். இதே போல போட்டியாளர்களும் அமுதவாணன் மற்றும் ஜனனிக்கு வில் அம்பை தருகின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் முதல் ப்ரோமோவில் சூட்டை கிளப்பி விட்டு, இரண்டாவது ப்ரோமோ இப்படி மொக்கையா இருக்கே, இதெல்லாம் ஒரு ப்ரோமோவா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











