மைனா மீது கடுப்பில் இருக்கும் தனலட்சுமி..இந்த பொண்ணு திருந்தவே திருந்தாது போல..விளாசும் நெட்டிசன்ஸ்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் தனலட்சுமி மைனா மீது இருக்கும் கோபத்தில் வீட்டையே இரண்டாக்கி உள்ளார்.

பிக் பாஸ் ஆறாவது சீசன் 43 நாட்களை கடந்து சுவாரசியமாக ஒளிபரப்பாகி வருகிறது.

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஜிபி முத்து,சாந்தி, அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி வெளியேறிய நிலையில் தற்போது 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

உலகநாயகன் கமல்ஹாசனை தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சென்ற வாரம் ராஜ வம்சமும் அருங்காட்சியமும் டாஸ்க் மூலம் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொண்டனர். இறுதி வார நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல் வந்து பஞ்சாயத்துகளை பற்றி பேசினார்.

விளையாட்டிலும் நேர்மை இருக்கணும்

விளையாட்டிலும் நேர்மை இருக்கணும்

டாஸ்கின் போது அசீம் போட்டியாளர்களிடம் பேசியதை வன்மையாக கண்டித்த கமல், இந்த வாரமும் அசீமை வெச்சு செய்தார். ஆனால், அசீம் இது எல்லாம் கேமுக்காகத்தான் செய்தேன் என்று சொன்ன போது விளையாட்டிலும் நேர்மை இருக்க வேண்டும் என்றார். அதேபோல விக்ரமன், அழுதவாணன், ஜனனி, தனலட்சுமி என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அறிவுரை கூறினார்.

கடுப்பில் இருக்கும் தனா

கடுப்பில் இருக்கும் தனா

இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் மைனா வந்து தனலட்சுமியிடம் உனக்கு என்ன பிரச்சினை எனக் கேட்கின்றார். அதற்கு உடனே தனலட்சுமி முன்னாடியே டீம் பிரிச்சாச்சு தானே என ஜனனியை பார்த்துக் கேட்கின்றார். இதையடுத்து, ஏன் அந்த 2 பேரும் அப்படியே இருக்கணும் அவங்களை டீம் மாத்துங்க என்கிறார்.

திருந்தவே திருந்தாது போல

திருந்தவே திருந்தாது போல

இதையடுத்து, ஷிவின் அவங்களுக்குத் தான் சமைக்க தெரியும் அதனால் தான் என்று, தனலட்சுமியிடம் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் தனலட்சுமி ஆத்திரத்தில் கத்திக்கொண்டே இருந்தார். அத்தோடு ஷிவினை இனிமேல் தன்னோடு பேச வேண்டாம் எனவும் கோபத்தில் கூறுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் போன வாரம் அசீம் இந்த வாரம் தனலட்சுமியா? இந்த பொண்ணு திருந்தவே திருந்தாது போல என கருத்துகளை கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X