அடிச்சான் பாரு சிக்ஸரு.. சீசன் 6ன் முதல் ஓபன் நாமினேஷன்..ஆடிப்போன போட்டியாளர்கள்!

சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் முதல் ஓபன் நாமினேஷன் பிராசஸ் தொடங்கி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அடிதடி, சண்டை, தள்ளுமுள்ளு, வாக்கு வாதம், காதல், கண்ணீர் என அனைத்தும் இருக்கும் தான். ஆனால், இந்த சீசனில் இவை அனைத்தும் கொஞ்சம் ஒவர் லோடாக இருக்கிறது.

நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு மூணு நாட்களிலேயே போட்டியாளர்கள் இடையே சண்டை உருவானது. வீட்டில் சண்டை ஏற்பட மூலக்காரணமாக இருந்தவர் நம்ம அசீம் தான்.

அசீம்

அசீம்

பிக் பாஸ் வீட்டில் அதிகம் பேசு பொருளாக இருப்பவர் அசீம் தான். அவர் எது செய்தாலும் அது சர்ச்சையாகி விடுகிறது. சென்ற வாரம் நடந்த லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் அசீம் படைத்தளபதியாக இருந்தார். படைத்தளபதி என்பதால், பாகுபலி பிரபாஸ் போல ஒவர் மிடுக்குடன் வீட்டில் அட்ராசிட்டி செய்து வந்தார்.

கடுப்பான ஏடிகே

கடுப்பான ஏடிகே

இதையடுத்து, ராஜா, ராணி சாப்பாட்டில் உப்பு அதிகமான பிரச்சனையின் போது, "காரிதுப்பிய சாப்பாட்டை" ராஜா சாப்பிடுவாரா என திரும்ப திரும்ப கேட்டு போட்டியாளர்களை கடுப்பாக்கினார். அதுமட்டும் இல்லாமல் சாவியை ஒளித்துவைத்துக்கொண்டு ஏடிகேவை டென்ஷன் ஆக்கினார். இதனால் ஏடிகே மற்றும் அசீம் கடுமையாக ஒருவரை திட்டிக்கொண்டனர்.

நேர்மை வேண்டாமா?

நேர்மை வேண்டாமா?

இதையடுத்து இந்த பஞ்சாயத்துகளை தீர்த்துவைக்க வந்த கமல், அசீமிடம் இது தான் உங்களின் ஸ்டேட்டர்ஜி என்றால், நான் மற்றவர்களை வார்ன் பண்ணிவிடுவேன் என்றும், கடைசி வரையில் ஏடிகேவை டென்ஷனாக்கியது தவறு என்று அசீமை கண்டித்தார். மேலும் விளையாட்டுதான் என்றாலும் அதிலும் ஒரு நேர்மை வேண்டாமா என்று அசீமை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினார்.

புலம்பிய அசீம்

புலம்பிய அசீம்

கமலின் பேச்சால் துவண்டு போன அசீம், நான் கேமைத்தான் விளையாடுகிறேன், எனக்கு எப்படி இருப்பது என்றே தெரியவில்லை. எல்லாரும் என்னையே டார்கெட் செய்வது போல இருக்கிறது என தனிமையில் புலம்பினார். இந்த வாரம் அதிக வாக்குகளை பெற்று முதல் இடத்தில் இருந்த அசீமை கமல் கடைசியாக சேவ் செய்யப்பட்டதாக கூறினார்.

ஓபன் நாமினேஷன்

ஓபன் நாமினேஷன்

இதையடுத்து, தற்போது 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது அதில், இந்த வாரம் ஓபன் நாமினேஷன் என்று பிக் பாஸ் கூறுகிறார். இதையடுத்து, முதல் நபராக வரும் அசீம், தனலட்சுமிக்கு பெரியவங்களுக்கு மரியாதையே கொடுக்க தெரியல என்றார். அடுத்து வரும் விக்ரமன், விளையாட்டை விளையாட்டா மட்டும் பார்க்க வேண்டும், எதற்கு எடுத்தாலும் சண்டை பிரச்சனை என அனைத்து போட்டியாளர்களும் அசீமை நாமினேட் செய்கின்றனர்.

அசீமுக்கு பெரும் ஆதரவு

அசீமுக்கு பெரும் ஆதரவு

என்னத்தான் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு அசீமின் செயல் பிடிக்கவில்லை என்றாலும், பிக் பாஸ் பார்வையாளர்கள் அசீமுக்கு ஆதரவு குரல் கொடுத்துள்ளனர். அவர் மட்டும் தான் உண்மையான விளையாட்டை விளையாடி வருகிறார் என்றும், மற்றவர்கள் எல்லாம் நேரத்திற்கு தகுந்த மாதிரி மாறிவிடுகின்றனர் என்றும் பலர் அசீமுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X