தயவு செய்து வெளியில போங்க...ஷிவினை வெளியேற்றிய ஏடிகே...இனி என்னென்ன நடக்கப் போகுதோ?
சென்னை : பிக் பாஸ் வீடு கடந்த வாரம் அரண்மனையாக மாறிய நிலையில் தற்போது நீதிமன்றமாகி காரசாரமான விவாதம் நடந்து வருகிறது.
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் வழக்கறிஞர் ஷிவினுக்கும் நீதிபதி ஏடிகேவுக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது.
போன வாரம் அசீம், நேற்று தனலட்சுமி இன்னைக்கு ஷிவினா நல்லா பண்றீங்க பிக் பாஸ் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

நீதிமன்றமாக மாறிய வீடு
இந்த வார வீக்லி டாஸ்கிற்காக வீடு நீதிமன்றமாக மாறி உள்ளது. இதில், ஒவ்வொரு போட்டியாளர்களும் மெயின் டோர் கேமரா வழியாக தங்களுடைய வழக்கை பதிவு செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபர் அவருக்கான வழக்கறிஞரை தேர்வு செய்து அவருக்கான வழக்கை தயார் செய்து கொள்ள வேண்டும் என்று விதிமுறைகளை அசீம் படிக்கிறார்.

ஏடிகே நீதிபதி
போட்டியாளர்கள் அனைவரும் கேமரா முன்பு தங்களுடைய வழக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இதில், அமுதவாணன் தரப்பு வழக்கறிஞராக அசீம் ஆஜராகி இருக்கிறார். விக்ரமனை கூண்டில் நிற்க வைத்து அடுக்கடுக்கான கேள்வியை கேட்பது போல காலையில் முதல் ப்ரோமோ வெளியானது. இந்த நீதிமன்ற டாஸ்கில் ஏடிகே நீதிபதியாக இருக்கிறார்.

வெளியேறிய ஷிவின்
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், ஏடிகே ஒரு வக்கீலாக சரியான பாயிண்டை எடுத்து பேச வேண்டியது நீங்கள் என்கிறார். இதற்கு ஷிவின் இப்போ பேசலாமா என்று கேட்க, ஜட்ஜ்மெண்ட் முடிந்து விட்டது, நீங்கள் சொல்வதை ஏற்க முடியாது என ஏடிகே சொல்ல,கடுப்பான ஷிவின் ஏதோ சொல்ல, இது கோர்ட் மரியாதை இல்லாமல் பேசுவதாக இருந்தால் தயுவு செய்து வெளியில் போகலாம் என்கிறார் ஏடிகே. அதன்பின் ஷிவின் கோபத்துடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.

ரசிகர்கள் ஆர்வம்
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அடிதடி சண்டை என்றால் என்னதான் செய்வது. இது எல்லாம் பிக்பாஸ் ஸ்டேட்டர்ஜி டிஆர்பி ரேட்டிங்கிற்காக இன்னும் என்னென்ன செய்யப்போறீங்களோ என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். எது எப்படியோ எங்களுக்கு டைம் பாஸ் ஆனா போதும் என இன்றைய எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











