Don't Miss!
- News
பாஜகவுக்கு 4 ஆப்ஷன்.. எடப்பாடிக்காக துடிக்கும் அண்ணாமலை.. இதான் காரணமாம்! போட்டு உடைக்கும் ப்ரியன்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை..பழமொழியில் ட்விஸ்ட் வைத்த கமல்..வெளியேறுவது யார்?
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவிலேயே, ரசிகர்களின் ஹாட் பீட்டை அதிகரிக்கும் வகையில் எவிக்ஷன் கார்டுடன் வந்துள்ளார் கமல்.
இந்த வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில், அசீம், தனலட்சுமி மணிகண்டன், ராபர்ட் மாஸ்டர், ராம், கதிரவன் என 6 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் ராபர்ட் மாஸ்டர், ராம் இருவர் மட்டுமே டேஞ்ஜர் ஜோனில் இருக்கிறார்கள். இதில் யார் வெளியேறுவார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
அசீமுக்கே அக்காடா நான்.. முதல் நபராக சேவ் ஆன தனலட்சுமி.. பிக் பாஸ் டீம் விளையாடும் மறைமுக கேம்?

நாயகன் மீண்டும் வரார்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று சனிக்கிழமை என்பதால் மாஸ் என்ட்ரி கொடுத்திருந்தார் உலக நாயகன் கமலஹாசன். வழக்கமாக அசீம் மற்றும் தனலட்சுமியை வறுத்தெடுக்கும் கமலஹாசன், நேற்று ஒட்டுமொத்த போட்டியாளர்களையும் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார். குறிப்பாக கடந்த வாரம் நடந்த நீதிமன்ற டாஸ்க் குறித்து பல கேள்விகளை மடக்கி மடக்கி கேட்டார்.

பூசி முழுகிய நாமினேஷன்
கடந்த வாரம் நடைபெற்ற ஓப்பன் நாமினேஷனில் அசீம், தனலட்சுமி மணிகண்டன், ராபர்ட் மாஸ்டர், ராம், கதிரவன் ஆகியோர் நாமினேஷன் ஆகி இருந்தார்கள். ஓப்பன் நாமினேஷன் என்பதால் பலர் சேஃப் விளையாடி விட்டார்கள், நாமினேஷனுக்கு போட்டியாளர்கள் சொன்ன ரீசன் பூசி முழுகியது போல் இருந்தது என்று கூறி, ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் கன்ஃபெஷன் ரூமில் நாமினேஷன் வைத்திருந்தால் யார் பெயரை சொல்லி இருப்பீர்கள் என்று கேட்டார்.

அசீமுக்கு பெருகும் ஆதரவு
இதையடுத்து, நேற்றைய நிகழ்ச்சியில் முதல் நபராக அதிக ஓட்டுகளை பெற்ற தனலட்சுமி காப்பாற்றப்படுவதாக அறிவித்தார். இதை அடுத்து இரண்டாவதாக அசீம் காப்பாற்றப்பட்டார். அசீம் ஒருமையில் பேசுகிறார், ஆத்திரத்தில் கத்துகிறார் என பல குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவருக்கு தற்போது ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது. ஹவுஸ்மேட்டுகள் அவரை எத்தனை முறை நாமினேஷன் செய்தாலும் அவரை ரசிகர்கள் காப்பாற்றி விடுகிறார்கள்.

இந்த வாரம் யார்?
இந்நிலையில், இன்று காலையிலேயே சுட சுட பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் நாமினேட் ஆனவங்க எல்லாம் கையை தூக்கச் சொல்கிறார் கமல். இதில் யார் காப்பாற்றப்படுவார் என்று நினைக்கிறீர்கள் என கேள்வி கேட்க, அனைத்து போட்டியாளர்களும் மணிகண்டன் பெயரை கூறுகிறார்கள்.

கைக்கு எட்டியது..வாய்க்கு எட்டாமல் போனது
எல்லா இடத்திலும் ஜோக்கும் விளையாட்டுமா இருந்துவிட முடியாது என்பதற்கு இதைவிட வேறு ஒரு உதாரணத்தை சொல்ல முடியாது. கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போக வாய்ப்பு உள்ளது என்று கூறிவிட்டு இந்த வாரத்தின் எவிக்ஷன் கார்டை மக்களிடம் காட்டி உள்ளார் கமல். இந்த வாரத்தில் குறைந்த வாக்குகளை ராம் வாங்கி இருந்த நிலையில் அவர் இந்த வாரம் வெளியேறி இருப்பதாக கூறப்படுகிறது.