Don't Miss!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
லூசு மாதிரி பேசாதீங்க..கடும் வாக்குவாதத்தில் அசீம், ஜனனி..ரணகளமான பிக் பாஸ் வீடு!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களின் அதிக வரவேற்பை பெற்றுவரும் நிகழ்ச்சியாக உள்ளது. இதுவரை வந்த ஐந்து சீசன்களை தாண்டி இப்போது 6வது சீசனுக்கு தனி வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு போட்டியாளரும் அவர்களது விளையாட்டை விளையாடுகிறார்கள், ராம், ரச்சித்தா, கதிர் மட்டும் நோகாமல் நுங்கு சாப்பிட்டு வருகிறார்கள். இவர்களும் விளையாட்டில் கவனம் செலுத்தினால் ஆட்டம் இன்னும் சூடுபிடிக்கும்.
பிக் பாஸ் வீட்டின் குட்டிப் பெண்ணாக இருந்த ஜனனிக்கு ஆரம்பத்தில் வரவேற்பு தடபுடலாக இருந்தது. ஆனால், நாட்கள் போக போக ஆர்மியே கடுப்பாகும் அளவுக்கு விஷபாட்டிலாக இருக்கிறார் ஜனனி.
பிக்
பாஸ்:
அப்போ
அண்ணான்னு
கூப்ட
வேண்டாம்னு
சொன்ன
அசீம்..
இப்போ
ஜனனியிடம்
எப்படி
எகிறுறாரு
பாருங்க!

அமைதியாக இருந்த வீடு
பிக் பாஸ் வீட்டில் மூன்று நாளாக எந்த சண்டையும் சர்ச்சையும் இல்லாமல் அமைதியாக இருந்த நிலையில், ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் என்ற புதுவிதமான டாஸ்க் கொடுத்து, சண்டையை கொளுத்தி போட்டுள்ளார் பிக் பாஸ். இதற்காக பிக் பாஸ் வீடு காடாக மாறி உள்ளது. இந்த டாஸ்க்கிற்காக போட்டியாளர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்துள்ளனர்.

ஆதிவாசிகள் VS ஏலியன்ஸ்
இந்த டாஸ்கில் ஆதிவாசிகள் வைத்திருக்கும் அதிசய கற்களை ஏலியன்ஸ் திருட வருவதும், அவர்களிடம் இருந்து தங்களின் வளங்களை காப்பாற்றுவதும் தான் இந்த வார டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில், போட்டியாளர்கள் யாரேனும் அழுதுவிட்டால் அல்லது தன்னுடைய உணர்ச்சிகளை காட்டி விட்டாலோ அவர்கள் எதிர் அணியில் ஒரு நபராக மாறிவிட வேண்டும் என்பது விதி.

கதறி அழுத ஷிவின்
இதனால், காலையில் வெளியான முதல் ப்ரோமோவிலேயே ஷிவினின் அம்மா குறித்து ஏலியனாக இருக்கும் தனலட்சுமி ஏதோ பேச, கடுப்பான ஷிவின் எனக்கு அம்மாவ எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு தெரியாதா? டாஸ்கிற்காக எதை வேண்டுமானாலும் செய்வீயா? என கேட்டு கதறி அழுதுள்ளார். ஆனால், தனலட்சுமி வழக்கம் போல திமிராகவே இருந்தார்.

லூசு மாதிரி பேசாதீங்க
இதையடுத்து, தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில், ஜனனி அசீமை பார்த்து லூசு மாதிரி பேசாதீங்க என்று சொல்கிறார். அசீம் ஏற்கனவே டென்ஷன் பார்ட்டி இதில் லூசுனு சொன்னா சும்மா இருப்பாரா? சிங்கம் மாதிரி எழுந்து வந்து லூசு...கிசுனு பேசாதே ஜனனி உன் வயசு என்ன...என் வயசு என்ன, இனிமேல் அசீம்னு கூப்பிட்டுப்பாரு என்று தனது அடுத்த முகத்தை காட்டினார். இதனால் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் ஏற்பட்டு வீடே ரணகளமானது.