அனிதா பாதி..வனிதா பாதி..இரண்டும் சேர்ந்த கலவை நான்..தனலட்சுமியை வச்சு செய்த நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில் மைனாவும் மகேஸ்வரியும் சண்டை போட்டுக்கொள்கின்றனர்.
இதில் மைனா, காஃபிக்கும், சாப்பாட்டுக்கும் உங்க கிட்ட கெஞ்சனுமா? என்று மகேஸ்வரியிடம் சண்டை போடுகிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் பலர், இரண்டு நாளா வீடு அமைதியா இருந்துச்சு இன்னைக்கு ஆரம்பிச்சீட்டீங்களே, நீங்க சண்டை போட்டாத்தான் டிஆர்பி ரேட்டிங்கே அதிகரிக்கும் என்று கருத்து பகிர்ந்துள்ளனர்.

சந்தோஷமா இருக்கு
இவர்கள் சண்டை போட்டுக்கொள்ளும் ப்ரோமோவை பார்த்த ஒரு இணையவாசி, இந்த தருணத்தை தான் நான் எதிர்பார்த்தேன், நல்லா முட்டிக்கோங்க. மைனா மகேஸ்வரி, ரெண்டு பேருக்குமே பயங்கற கேட்ட புத்தி, அப்படி இருக்கும் போது எப்படி ஒண்ணா இருக்க முடியும், மத்தவங்க கிட்ட சண்டைனா மூச்சு விடாம பேசுவாங்க, இவங்களுக்குள்ள சண்டைனா இவ்ளோதானா. இருவரும் சண்டை போடுவதை பார்க்க சந்தோசமாக இருக்கு.

புரியாத ஜென்மங்கள்
நன்றாக ஆடை அணிந்து மேக்கப் போட்டு கேட் வாக் நடந்து ஃபோட்டோசூட் கொடுத்தால் விடலாம். ஆனால், தனலட்சுமி மற்றும் மகேஸ்வரி எல்லாம் அடிச்சுட்டு கிடக்குதுங்க. புரியாத ஜென்மங்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

உண்மை முகத்தை மறைக்க முடியும்
அசீம் தான் ஒவராக பேசுகிறார் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றார்கள். தற்போது இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்ஸ், அசீம் குரல் உரக்க கேட்கும் வரைக்கும் தான் உள்ளே இருக்கும் பேட்டியாளர்கள் தங்களின் உண்மை முகத்தை மறைக்க முடியும் என்பது மீண்டும் நிரூபணமாகின்றது.

அட கடவுளே
சாப்பாட்டுக்கு சண்டையா..அட கடவுளே நல்லாருக்குடா உங்க டாஸ்க்கு என்றும், உங்களுக்கு இடையில் நல்லா சண்டையை தூண்டிவிட்டு பிக் பாஸ் அதை ஆனந்தமா ரசித்து ரசித்து பார்த்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.

அனிதா பாதி, வனிதா பாதி
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் மணிகண்டனும், தனலட்சுமியும் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டனர். இதில், தனலட்சுமி மணிகண்டனை வாடா போடா என்று பேசியதை பார்த்த ஒரு நெட்டிசன்ஸ். அனிதா பாதி, வனிதா பாதி இரண்டும் சேர்ந்த கலவை என ஒரு போட்டோவை எடிச் செய்து பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











