உங்ககிட்ட காஃபிக்கும்..சாப்பாட்டுக்கும் கெஞ்சனுமா..மகேஸ்வரியை வெளுத்து வாங்கிய மைனா!

சென்னை: இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில் மகேஸ்வரியும் மைனாவும் சண்டை போட்டுக்கொள்கின்றனர்.

17 போட்டியாளர்களுடன் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில், கடந்த வாரம் டிவி டாஸ்க் நடைபெற்றது. இதில் பெருசா சுவாரசியம் இல்லாமல் சப்புனு முடிந்தது.

இதையடுத்து இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்கும் வகையில், டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன்

பிக் பாஸ் சீசன்

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் லக்ஸரி பட்ஜெட் டாஸ்கிற்காக பிக் பாஸ் வீடு ஸ்வீட் பேக்டரியாக மாறி உள்ளது. இதில் கண்ணா லட்டு திங்க ஆசையா என்றும், மற்றொரு அணிக்கு அட தேன் அடை என்றும் பெயரிட்டு இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். 24 மணி நேரமும் இந்த பேக்டரி செயல்படவேண்டும் என்பதால்,போட்டியாளர்கள் தூங்காமல் விளையாடி வருகின்றனர்.

கீழே விழுந்த தனலட்சுமி

கீழே விழுந்த தனலட்சுமி

காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், மணிகண்டனுக்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதில், அமுதவாணன் மற்றும் தனலட்சுமி இருவரும் கன்வேயரில் வரும் ஸ்வீட் பாக்சை எடுக்க, அதன் அருகே நின்றுக்கொண்டு மற்ற போட்டியாளர்களை நுழையவிடாமல் தடுத்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த மணி, தனலட்சுமி கையில் இருந்த ஸ்வீட் பாக்சை பிடுங்கிய போது தனலட்சுமி கீழே விழுந்தார்.

களேபரமான வீடு

களேபரமான வீடு

இதையடுத்து, தனலட்சுமி கத்தி கூச்சல் போட்டு ரவுடி போல நடந்து கொண்டார். அது மட்டும் இல்லாமல், வாடா போடா என பேசியதைக் கேட்டு கடுப்பாகும் மணிகண்டன் அவரை அடிக்க சென்றார். இதனால், பிக்பாஸ் வீடே களேபரமானது. இரண்டாவது ப்ரோமோவிலும் மணிகண்டன், தனலட்சுமி சண்டை தான் இடம் பெற்றிருந்தது.

3வது ப்ரோமோ

3வது ப்ரோமோ

தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது ப்ரோமோவில் மைனாவும் மகேஸ்வரியும் சண்டை போட்டுக்கொள்கின்றனர். இதில் மைனா, தொழிலாளிக்கு சாப்பாடு கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை, காஃபிக்கும், சாப்பாட்டுக்கும் உங்க கிட்ட கெஞ்சனுமா? என்று மகேஸ்வரியிடம் சண்டை போடுகிறார்.

தரமான சம்பவம்

தரமான சம்பவம்

இதையடுத்து, மகேஸ்வரி இன்னைக்கு இவ்வளவு ரூல்ஸ் பேசும் இவங்க நேற்று மேனேஜருக்கு என்ன சாப்பாடு கொடுத்தாங்க, தொழிலாளருக்கு கொடுத்த சாப்பாட்டைத்தான் எனக்கு கொடுத்தாங்க என்று அவர் பங்குக்கு அவர் பேசுகிறார். இந்த மூன்று ப்ரோமோவையும் பார்த்த ரசிகர்கள் இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என்று நிகழ்ச்சியை பார்க்க தயாராகி விட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X