குத்துனா இதுதான் குத்து..இறங்கி குத்திய விக்ரமன்..எதிர்பார்க்கவே இல்லை மனுஷன் பின்னிட்டாரு!

சென்னை : இன்றைய நிகழ்ச்சிக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், விக்ரமன் இறங்கி குத்தி அனைவரிடத்திலும் கைத்தட்டலை பெற்றார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

எலிமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்சி, ரச்சிதா, ராம், சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் உள்ளனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் இரண்டு நாட்களிலேயே டீக்கும் சாம்பாருக்கும் சண்டை தொடங்கியது. வழக்கமாக நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் தான் சண்டை தொடங்கும் ஆனால், இந்த சீசனில் முன்கூட்டியே சண்டை ஆரம்பித்து விட்டது. டிஆர்பிக்காக நடக்கும் சண்டையாகக்கூட இருக்கலாம். எது எப்படியோ சண்டையை பார்ப்பதற்கு நல்லாத்தான் இருக்கு.

வைல்ட் கார்ட் என்ட்ரி

வைல்ட் கார்ட் என்ட்ரி

சனிக்கிழமை நடந்த எபிசோடில் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்களுக்கு கமல் வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் 20 போட்டியாளர்கள் ஏற்கெனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் மைனா நந்தினி வைல்ட் கார்ட் எண்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளார். இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 21 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

குத்துனா இதுதான் குத்து

குத்துனா இதுதான் குத்து

இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், டான்ஸ் மராத்தான் போட்டியில் விக்ரமன் மற்றும் விஜே கதிரவன் ஆகியோர் நடனமாடுகின்றனர். இதில் ஏ பெரிசு பாடல் ஒலித்ததும் விக்ரமன் ஓடிவந்து செம ஆட்டம் போட்டார். ஆனால் விஜே கதிரவன் அப்படியே நின்று விட்டார். இந்த மராத்தான் டாஸ்கில் விக்ரமன் வெற்றி பெற்றார். அவர் இப்படி ஆடுவார் என்று சற்றும் எதிர்பார்க்காத போட்டியாளர்கள் வாய்பிளந்து நீங்க இப்படி ஆடுவீங்க என்று எதிர்பார்க்கவில்லை என கூறினர்.

முதல் ப்ரோமோ

முதல் ப்ரோமோ

முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், விஜே மகேஸ்வரி தனது வாழ்க்கையில் நடந்த சோக கதையை சொல்ல ஆரம்பிக்கும்போதே அசீம் முதல் நபராக வந்து பசரை அடித்துவிடுகிறார். அவரைத் தொடர்ந்து, நந்தினி மற்றும் அசல் ஆகியோர் பசரை அடிக்கின்றனர். அதே போல விஜே கதிரவன் கதை சொன்ன போதும் ஷிவின் பசரை அடித்து வடுகிறார்.

!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X