வெள்ளை சட்டை போட்டால் அரசியல்வாதியா?என்னடா பண்ணுவ..விக்ரமனிடம் ஏடாகூடமாக பேசிய ஆசீம்!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் கடைசிநேரத்தில் நடக்கும் சண்டை போல இந்த சீசனில் இரண்டாவது வாரத்திலேயே சும்மா தெறியா இருக்கிறது.
அதிலும், சும்மா இருந்த போட்டியாளர்களை உசுப்பேத்தும் வகையில், ஒன்றிலிருந்து 13வரை போட்டியாளர்களை வரிசைப்படுத்தி ரேங்கிங் கொடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
ஒரு டாஸ்க்கை கொடுத்து கொளுத்தி போட்டுவிட்டு அமைதியாக வேடிக்கைப்பார்த்துக் கொண்டு இருக்கிறார் பிக் பாஸ். இதனால்,காலையில் இருந்தே வீட்டில் சண்டை அனல் பறக்கிறது.

தகுதியே இல்லை
பிக் பாஸ் சீசன் 6 தற்போது இரண்டாவது வாராத்தில் வெற்றி கரமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் ஒன்றிலிருந்து 13 போட்டியாளர்களுக்கு ரேங்க் கொடுக்கும் டாஸ்கில் அசீம், மகேஸ்வரி, விக்ரமன் மற்றும் ஆயிஷா போன்றவர்கள் ரேங்கிங் வரிசையில் இருக்கவே தகுதியில்லை என்று கூறுகிறார்.

ஒருமையில் பேசிய ஆசீம்
அசீம் பேசியதை கேட்டு டென்ஷனான ஆயிஷா, என்ன எனக்கு தகுதியில்லை என்று கேட்க, இந்த வீட்டில் நீ தூங்குவதை தவிர வேறு என்ன செய்த என்று கேட்கிறார். இதனால்,மேலும் ஆத்திரம் அடைந்த ஆயிஷா அதை சொல்ல உனக்குத் தகுதியில்லை நீ தான் எப்போதும் தூங்கிட்டே இருக்க என்று பதிலுக்கு கத்துகிறார்.இதனால், கோபத்தின் உச்சிக்கு போன ஆசீம் ஆயிஷாவை வாடி.. போடி என்று ஒருமையில் பேச வீடே சிறிது நேரத்தில் மீன் மார்கெட் போலானது.

வெள்ளை சட்டை போட்டுட்டு, அரசியல்வாதினு
இதையடுத்து, தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இரண்டாவது ப்ரோமோவிலும் ஆசீம் பேசுகிறார்.இதில் விக்ரமன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறார் இதனால், ஜெயிலில் போய் தூங்கட்டும் என்று கூற, அப்போது குறுக்கிடும் விக்ரமன் நீ மட்டும் என்ன பண்ற நீயும் தூங்கிட்டுத்தான் இருக்க என சொல்ல, யோவ் வேலையை பாருடா, வெள்ளை சட்டை போட்டுட்டு.. அரசியல்வாதினு சொல்லிட்டு இருக்கே..போடா என்று விக்ரமனை பார்த்து ஏடாகூடமாக பேசுகிறார் ஆசீம்.

என்னடா பண்ணுவ…அடிப்பியா?
ஆசீமின் அத்து மீறிய பேச்சால் கடுமையாக கோபமடைந்த விக்ரமன், மரியாதையா பேசு, மரியாதையா பேசு என்று கூறிக்கொண்டே இருந்தார். ஆனால், ஆசீம் போடா வாடா என்றும்... என்னடா பண்ணுவ...அடிப்பியா என ஓவராக பேசுகிறார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு நடப்பது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது. இப்போ இன்றைய எபிசோடில் தரமான சம்பவம் இருக்கு என்று இன்றைய எபிசோடுக்கான ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











