ராம்,ஜனனியை சிறைக்கு அனுப்பிய பிக்பாஸ்..அவங்க சண்டை போட்டதற்கு நாங்க ஜெயிலுக்கு போகனுமா?

சென்னை : நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த 9-ம் கோலாகலமாக தொடங்கியது.

ஜி.பி.முத்து, அசல் கோலார், ஷிவின் கணேசன், முகமது அசீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரீனா, மணிகண்ட ராஜேஷ், ரக்ஷிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், விஜே மகேஸ்வரி சாணக்கியன், வி.ஜே.கதிரவன், குயின்சி ஸ்டான்லி, நிவா, தனலட்சுமி 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த எபிசோடில் நடிகை மைனா நந்தினி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்ததால், பிக் பாஸ் வீட்டில் தற்போது 21 பேர் உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6ல்

பிக் பாஸ் சீசன் 6ல்

பரபரப்பாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6ல் இந்த வாரத்தின் முதல் கேப்டனாக ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஆயிஷா, அசீம், தனலட்சுமி, மகேஸ்வரி, நிவா, குயின்சி, ரச்சிதா, ராம், சாந்தி, ஷெரினா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் உள்ளனர். இதனால், இந்த வாரத்தில் யார் வெளியே போகப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

சிறைக்கு போன ஜனனி

சிறைக்கு போன ஜனனி

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் ஜனனியும், ராமும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள புரோமோ வெளியாகி உள்ளது. யாரோ சண்டை போட்டதற்கு நம்மை ஏன் தேர்ந்தெடுத்து சிறையில் அடைக்கிறார்கள் என இருவரும் ஆதங்கத்தோடு பேசும் காட்சிகள் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளது. அவர்கள் இருவரும் எதற்காக வெளியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டனர் என்பதை இன்றைய எபிசோடில் தான் தெரியவரும்.

ஓருமையில் திட்டிய ஆசீம்

ஓருமையில் திட்டிய ஆசீம்

முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், ரேங்க் கொடுக்கும் டாஸ்கில், ஆசீம், மகேஸ்வரி, விக்ரமன் மற்றும் ஆயிஷா போன்றவர்களுக்கு தகுதியில்லை என்று கூறினார். இதனால், ஆசீமுக்கும் ஆயிஷாவுக்கும் சண்டை நடந்தது. இதனால், கோபத்தின் உச்சிக்கு போன ஆசீம் ஆயிஷாவை வாடி.. போடி என்று ஒருமையில் பேச வீடே சிறிது நேரத்தில் களேபரமானது.

வெள்ளை சட்டை போட்டால் அரசியல்வாதியா?

வெள்ளை சட்டை போட்டால் அரசியல்வாதியா?

இதையடுத்து, தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இரண்டாவது ப்ரோமோவிலும் ஆசீம் பேசுகிறார். இதில் விக்ரமன் எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கிறார் இதனால், ஜெயிலில் போய் தூங்கட்டும் என்று கூற, அப்போது குறுக்கிடும் விக்ரமன் நீ மட்டும் என்ன பண்ற நீயும் தூங்கிட்டுத்தான் இருக்க என சொல்ல, யோவ் வேலையை பாருடா, வெள்ளை சட்டை போட்டால் அரசியல்வாதியா என விக்ரமனை பார்த்து ஏடாகூடமாக பேசுகிறார் ஆசீம் இதனால்,வீடே ரணகளமானது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X