என்ன மாதிரி கெட்டவள் இந்த உலகத்திலேயே இல்ல...வில்லத்தனமாக பேசிய ஜனனி!
சென்னை : இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் ஜனனி, என்ன மாதிரி கெட்டவள் இந்த உலகத்தில் யாரும் இல்லை என கொள்ளைக் கூட்டது தலைவி போல பேசியுள்ளார்.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து, சாந்தி வெளியேறி உள்ள நிலையில் தற்போது 19 போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி தினமும் விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

நீயும் பொம்மை, நானும் பொம்மை
பிக் பாஸ் வீட்டில் இன்று நீயும் பொம்மை, நானும் பொம்மை டாக்ஸ் தொடங்கி உள்ளது. இதில், ஒரு அட்டை பெட்டிக்குள் 19 பொம்மைகள் வைக்கப்பட்டு இருக்கின்றது அந்த 19 பொம்மைகளில் போட்டியாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டு இருக்கும். அதில் போட்டியாளர்கள் ஆளுக்கு ஒரு பொம்மைகளை எடுத்துக்கொண்டு அலமாறியில் வைக்க வேண்டும்.

கடந்த முறையும் இதே டாக்ஸ்
அட்டை பெட்டியில் யார் பொம்மை கடைசி வரை எடுக்காமல் உள்ளதோ அவர் விளையாட்டை விட்டு வெளியேறுவார்கள். பிக் பாஸ் சீசன் ஐந்திலும் இதே பெயரில் போட்டி நடைபெற்ற போது, அக்ஷராவும் சிபியும் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டனர். அதே போல வருணுக்கும் நிரூபுக்கும் இடையே பொம்மை கிழித்து போகும் அளவுக்கு சண்டை நடந்தது.

என்ன மாதிரி கெட்டவள்..
தற்போது இதே பொம்மை டாக்ஸ் இன்று தொடங்கி உள்ளது. இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் ஜனனி பொம்மை டாஸ்கிலிருந்து வெளியேறுகிறார். இதனால், டென்ஷனான ஜனனி, என் கூட நல்ல பழகிட்டு இப்படி பண்ணா எனக்கு கஷ்டமா இருக்கும், என்ன மாதிரி கெட்டவள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது, என்ன மாதிரி அப்பாவியும் கிடையாது என்று வில்லத்தனமாக ஜனனி பேசி உள்ளது பிரோமோவில் வெளியாகி உள்ளது.

நான் யாருனு காட்டுறேன்
முன்னதாக காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் மணி ஒலித்ததும் போட்டியாளர்கள் அங்கும், இங்கும் ஓடி பொம்மையை எடுத்தனர். ஆனால், மணிகண்டனில் பொம்மையை யாரும் எடுத்து அலமாறியில் வைக்காமல் அட்டை பெட்டியில் கிடந்ததால், அவர் கேமை விட்டு வெளியேறினார். இதனால், கோபமடைந்த மணிகண்டன், என் பொம்மையை யாருமே எடுக்கவில்லை, இனி மேல் நான் யாருனு காட்டுகிறேன் என்ற ஆத்திரத்தில் கத்துகிறார்.


Click it and Unblock the Notifications











