யார் தள்ளிவிட்டதுனு கேமராவில் பாருங்கள்..கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்..ஓவர் டென்ஷனான தனலட்சுமி!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றை எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், தனலட்சுமி நான் யாரையும் தள்ளிவிடவில்லை என கோபத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி 17நாளுக்குள்ளே அடிதடி, தள்ளுமுள்ளு என 90வது நாளில் நடக்க வேண்டிய அனைத்தும் நடந்து வருகிறது.

கடந்த வாரத்தில் ரேக் டாஸ்கில் நடந்த கலவரத்தை மிஞ்சும் அளவுக்கு இந்த வாரமும் பொம்மை டாஸ்கில் சண்டை வெடித்துள்ளது.

பொம்மை டாஸ்க்

பொம்மை டாஸ்க்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நேற்று பொம்மை டாஸ்க் தொடங்கியது. ஒரு அட்டை பெட்டிக்குள் 19 பொம்மைகள் இருக்கும் அதில் ஒவ்வொரு பொம்மையிலும் போட்டியாளர்களின் பெயர்கள் எழுதப்பட்டு இருக்கும். அதை போட்டியாளர்கள் ஆளுக்கு ஒரு பொம்மைகளாக எடுத்துக்கொண்டு அலமாறியில் வைக்க வேண்டும். கடைசியாக எந்த பொம்மைக்கு இடம் இல்லையோ அவர் விளையாட்டை விட்டு வெளியேறுவார்.

கீழே விழுந்த ஆயிஷா

கீழே விழுந்த ஆயிஷா

காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் போட்டியாளர்கள் பேசி வைத்துககொண்டு, தங்களுக்கு பிடித்த போட்டியாளரின் பொம்மையை அலமாறியில் கைப்பதற்காக ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக்கொண்டு ஓடுகின்றனர். அப்போது ஆயிஷா, ஷெரின், தனலட்சுமி மூவரும் கீழே விழுந்து விடுகிறார்கள்.

கேமிராவை பாருங்கள்

கேமிராவை பாருங்கள்

இதைப்பார்த்து, கடுப்பான அசீம் பொண்ணு தானே நீயும்? அறிவுங்குறது கொஞ்சம் கூட இல்லையா? உடம்பு சரியில்லாத பெண்ணை இப்படியா தள்ளி விடுவா? என்று தனலட்சுமியை திட்டினார். ஆனால், தனலட்சுமி நான் யாரையும் தள்ளிவிடவில்லை வேண்டும் என்றால் கேமிராவை பாருங்கள் என்றார்.

என் மேல தப்பு இல்லை

என் மேல தப்பு இல்லை

இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், அசீம் தான், எல்லாரையும் புடிச்சி தள்ளுடானு சொல்லி எல்லாரையும் புடிச்சி தள்ளுனாரு. நீ எல்லாம் ஒரு பெண்ணானு கேட்குறாரே.. நான் திருப்பி கேட்க எவ்வளவு நேரமாகும், நான் அமைதியா இருந்தேன், என் மேல எந்த தப்பும் இல்லை.

கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்

கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கிறேன்

கமல் சார் வந்து, அவங்க நடந்து வரும் போது, நான் புடிச்சி தள்ளிவிட்டேன், கிழ விழுந்து மண்டையில் அடிபட்டு விட்டது என கேமராவில் காட்டினாருனா...நான் வெளியில போறேன், எல்லார் கால்ல விழுந்தும் மன்னிப்பு கேட்கிறேன். அப்படி இல்லனா எல்லாரும் என்கிட்ட மன்னிப்பு கேட்கனும் என்று கோபத்துடன் பேசுகிறார். இரண்டு ப்ரோமோவிலும் காரசாரமான விவாதம் நடந்துள்ளதால், இன்றைய எபிசோடில் சம்பவம் காத்திருக்கு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X