தள்ளிவிட்டது யாரு? நெட்டிசன்ஸ் பார்வையில் சிக்கிய விஷபாட்டில்..அட கொடுமையே!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், நான் யாரையும் தள்ளிவிடவில்லை, நான் தள்ளிவிட்டேன் என்று கேமராவில் தெரிந்தால், கால்ல விழுந்தும் மன்னிப்பு கேட்கிறேன் என கோபத்துடன் பேசியுள்ளார் தனலட்சுமி.
தனலட்சமி, தைரியமாக இப்படி சொன்னதால், இரண்டாவது ப்ரோமோவை இன்ச் பை இன்சாக ஓடவிட்டு பார்த்த ரசிகர்கள் தள்ளுவிட்டது யார் என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
ஒரு நெட்டிசன் ஷேர் செய்த வீடியோவை பார்த்து விட்டு, அட அந்த விஷ பாட்டில் தான் தள்ளிவிட்டதா? என கேட்டு வருகின்றனர்.

வட்டம் போட்டு காட்டி இணையவாசி
தனலட்சுமி நான் தள்ளிவிடவில்லை, அசீம் தான் தப்பா சொல்லுறாருனு கதைவிட்டுக்கொண்டு இருக்கும் ப்ரோமோவைப் பார்த்து கடுப்பான ஒரு நெட்டிசன், ஷெரினாவின் தலைமுடியை தனலட்சுமி பிடித்து இழுக்கும் போட்டேவை வட்டம் போட்டு காட்டி, தனலட்சுமியின் முகத்திரையை கிழித்துள்ளார்.

தனலட்சுமிக்கு சல்யூட்
மற்றொரு இணையவாசி, குறும்படத்திற்காக காத்திருக்கிறேன் அசீம் உன் நிலைமையை நெனச்சா தான் கொஞ்சம் சிரிப்பா வருது. தனம் உன்னுடைய பேச்சுக்கு சல்யூட், நீ தைரியமான பொண்ணு என்று பதிவிட்டுள்ளார்.

கமல் சாருக்கு என்ன மரியாதை?
என்னம்மா தனம் சனிக்கிழமை எபிசோடுக்கான ஸ்கிரிப்டை நீயே தயார் பண்ற? அப்பறம் கமல் சாருக்கு என்ன மரியாதை? விஜய் டிவிக்கு என்ன மரியாதை? நீ என்ன தான் லாஜிக்கா விளையாடுனாலும் உனக்கு வாயில தான் சனி என பதிவிட்டுள்ளார்.

விஷபாட்டில் ஷிவின்
எல்லாரும் தனலட்சுமிதான் தள்ளிவிட்டுவிட்டால் என்ற பஞ்சாயத்து நடந்து கொண்டு இருக்க, ஆயிஷாவை தள்ளிவிட்டுவிட்டு எனக்கு ஒன்னுமே தெரியாது என்பது போல ஷிவின் இருக்கிறார். அந்த வீடியோவை உன்னிப்பா பார்த்த ஒரு நெட்டிசன்ஸ் ஷிவின், ஆயிஷாவை தள்ளிவிடும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஷிவின் உண்மையில் விஷபாட்டில் தான் என கருத்துக்கூறி வருகின்றனர்.

ஏன் தடுக்கவில்லை
தனலட்சுமி ஜனனியுடன் சேர்ந்து விளையாடினாள், ஆனால் நடந்ததை எல்லாம் பார்த்த. இவர்களை அனைவரும் ஒரு குரூப்பாக செயல்பட்டு வந்தனர் ஜனனி வெளியேறிய பிறகும், இந்த குரூப் அப்படியே இருந்தது. அது மட்டும் இல்லாமல் எதிர் டீம் தனலட்சுமியை பாட்டு பாடி கிண்டல் அடித்தனர். ஆனால், இவர்கள் ராபர்ட்டையும் அமுதவாணனையும் ஏன் தடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications











