மைண்ட் கேம் விளையாடும் அசீம்..பயந்து நடுங்கும் ஆயிஷா..தரமான சம்பவம் கன்ஃபார்ம்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நடந்தது போல இந்த முறையிம் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகிறது. நாமினேஷனிலிருந்து தப்பிக்க ஒவ்வொரு போட்டியாளரும் தாறுமாறாக விளையாடி வருகின்றனர்.
போன பிக் பாஸ் சீசன் ஐந்திலும் நீயும் பொம்மை...நானும் பொம்மை டாஸ்கின் போது அக்ஷராவுக்கும் சிபிக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பீப் போடும் அளவுக்கு இருவரும் கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டனர்.
அதே போல, நிரூப் மற்றும் வருணுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதால், இந்த பொம்மை டாக்ஸ் டிஆர்பியில் முந்தியது.

ரணகளமான வீடு
பிக் பாஸ் சீசன் ஐந்தில் இந்த பொம்மை டாஸ்கிற்கு வரவேற்பு கிடைத்ததால், இந்த முறையும் அதே பெயரில் டாஸ்க் நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த சீசனே பரவாலப்பா என்பது போல, இந்த சீசனில் தள்ளுமுள்ளு, சண்டை, குரூப்பிஷம் என இரண்டு நாளா வீடே ரணகளமாக மாறி உள்ளது.

அண்ணா பயமா இருக்கு
தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது ப்ரோமோவில், அசீம், ஆயிஷாவிடம் ரச்சிதா பொம்மையை எடு என்கிறார். இதையடுத்து, ஆயிஷா, அண்ணா எனக்கு பயமா இருக்கு என்று பதற்றத்துடன் ரச்சிதாவின் பொம்மையை கையில் எடுக்கிறார். இதையடுத்து, ஷெரினா வேகமாக சென்று பொம்மையை அலமாறியில் வைக்கிறார்.

மைண்ட் கேம்
என் பொம்மையை ஆயிஷாவிடம் கொடுத்துவிட்டு ஓடு என்று சொன்னது அசீம் தான் என்று ரச்சித்தான அனைவர் இடத்திலும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். ஓடுற மாதிரி ஓடி.. வந்து தடுக்கிறார்.. மைண்ட் கேம் விளையாடி விட்டார் அசீம் என்று ரச்சித்தா, ராபர்ட் மாஸ்டரிடம் புலம்பிக் கொண்டு இருக்கிறார். போன வாரம் எலியும் பூனையுமா இருந்த அசீம், ஆயிஷா இன்று அண்ணா, தங்கச்சி என பாசமழை பொழிந்து வருகின்றனர்.

நீயும் பொண்ணுதானே
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் பொம்மையை எடுத்துக்கொண்டு ஓடும் போது, ஷெரீனா, ஆயிஷாவை அலமாறி அருகே செல்லவிடாமல் தனலட்சுமி தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஷெரீனா, ஆயிஷா கீழே விழுந்து தலையில் அடிபட்டது. இதனால், கடுப்பான அசீம், நீயும் பொண்ணுதானே உடம்பு சரியில்லாத ஆயிஷாவை தள்ளிவிடுறியே என ஆத்திரத்தில் கத்தினார்.

மன்னிப்பு கேட்கிறேன்
இதையடுத்து பிற்பகலில் வெளியான 2வது ப்ராமோவில், நான் யாரையும் தள்ளிவிடவில்லை, நான் தள்ளிவிட்டேன் என்று கேமராவில் தெரிந்தால், கால்ல விழுந்தும் மன்னிப்பு கேட்கிறேன் என கோபத்துடன் பேசியுள்ளார் தனலட்சுமி. இதையடுத்து இன்றைய எபிசோடு வேறலெவலில் இருக்கப்போகிறது என அவரது ரசிகர்கள் இன்றைய எபிசோடை பார்க்க ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











