சிறைக்கு சென்ற அசீம், ஷிவின்..இரு துருவங்களும் ஒரே சிறையில்..பரபரப்பான பிக் பாஸ் வீடு!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் அசீம் மற்றும் ஷிவின் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று வாரங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் சுவாரசியம் கூடிக்கொண்டே இருக்கிறது.

முதல் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யாரும் வெளியேற்றப்படாத நிலையில் இரண்டாவது வாரத்தில் ஜிபி முத்து தானாக வெளியேறினார். குறைந்த வாக்குகள் பெற்று சாந்தி வெளியேறினார்.

பொம்மை டாஸ்க்

பொம்மை டாஸ்க்

பிக் பாஸ் வீட்டில் நீயும் பொம்மை... நானும் பொம்மை டாஸ்க் ஒளிபரப்பாகி வருகிறது. அதில், ஷெரீனா மற்றும் நிவாஷினினை தனலட்சுமி தள்ளிவிட்டதாக மிகப்பெரிய களேபரமே வீட்டிற்குள் நடந்தது. இதையடுத்து,நேற்றைய எபிசோடில், அசல் கோலார் அசீமின் பொம்மையை ஸ்லாட்டில் வைக்க எடுத்து சென்ற போது, ஜனனி, தனலட்சுமி, ரச்சிதா தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தள்ளிவிட்ட அசீம்

தள்ளிவிட்ட அசீம்

இதையடுத்து, மணிகண்டன் உதவியுடன் அசல் கோலார், அசீமின் பொம்மையை உள்ளே வைத்தார். இதனால், இது செல்லாது என்று தனலட்சுமி, பொம்மையை தூக்கி வெளியில் வீசினார். இதனால், அசீமுக்கும் தனலட்சுமிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது போது, தனலட்சுமியை தள்ளிவிட்டுவிட்டு, அசீம் பொம்மையை ஸ்லாட்டில் வைத்தார்.

தள்ளிவிடுவது சரியா?

தள்ளிவிடுவது சரியா?

உடனே தனலட்சுமி,எங்க கையவச்சு தள்ளிவிடுறீங்க என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். இதையடுத்து, பெண்களின் நலம் விரும்பி விக்ரமன், அசீமிடம் பெண்களிடம் இப்படி நடந்து கொள்ளலாமா என்றும், பெண்ணை தள்ளிவிடுவது சரியா? என்றும் இருவருக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது. அசீம் தனது கருத்தை கூற, விக்ரமன் தனது கருத்தை சொல்ல வீடே ஞாயிற்றுக்கிழமை மீன் மார்க்கெட் போலானது.

இதற்கெல்லாம் அஞ்சமாட்டான் அசீம்

இதற்கெல்லாம் அஞ்சமாட்டான் அசீம்

இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் அசீம் மற்றும் ஷிவின் நீங்கள் இருவரும் சிறைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என பிக் பாஸ் உத்தரவிடுகிறார். உடனே மைனா அசீமிடம், என்னடா, இனி நீ வெளியில் தான் படுக்க வேண்டுமா என கேட்கிறார். இதற்கு, ஏதோ பெரிய தியாகம் செய்து விட்டு சிறைக்கு செல்வது போல நினைத்துக்கொண்ட அசீம், இதற்கெல்லாம் அஞ்சமாட்டான் இந்த அசீம் என்கிறார்.

இருவரும் ஒரே சிறையில்

இருவரும் ஒரே சிறையில்

மேலும்,சிறைச்சாலை எனக்கு பூஞ்சோலை என்று கூறுகிறார். இதையடுத்து, ஷிவின் மற்றும் அசீம் என இரு எதிர் எதிர் துருவங்களும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று நடைபெற்ற பொம்மை டாஸ்கின் போது இருவரும் ஒருவருக்கொருவர் வரைமுறை இல்லாமல் திட்டிக்கொண்ட நிலையில், தற்போது இருவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால், இன்றைய எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X