நானே ஹீரோ..நானே வில்லன்..வளர்ப்பு சரியில்லை..அசீமை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், அசீம் மற்றும் ஷிவின் நீங்கள் இருவரும் சிறைக்கு செல்லும் நேரம் வந்துவிட்டது என பிக் பாஸ் உத்தரவிடுகிறார்.
நேற்று நடந்த பொம்மை டாஸ்கில் ஷிவின் மற்றும் அசீம் இருவருக்கு இடையேயும் வாக்குவாதம் கடுமையாக நடந்தது.
ஷிவின் கேமை நன்றாக புரிந்து கொண்டு, தனக்குனு ஒரு டீமை சேர்த்துக்கொண்டு விளையாடி வருகிறார். அதேபோல அசீமும் ஒரு டீமை வைத்து விளையாடி வருகிறார்.

ஒன்றாக அடைச்சி வச்சிட்டாங்களே
ஷிவின், அசீம் என இரு எதிர் எதிர் துருவங்களும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டுள்ளதை பார்த்த ஒரு நெட்டிசன்ஸ், வடிவேலுவை கோவை சரளா அடித்து துவைக்கும் வீடியோவை வெளியிட்டு, பட்டாசையும், நெருப்பையும் ஒன்றாக அடைச்சி வச்சிட்டாங்களே என பதிவிட்டுள்ளார்.

நானே ஹீரோ, நானே வில்லன்
என்னடா இது நம்ம மாஸ்டர் ஸ்டேட்டர்ஜி அசீமுக்கு வந்த சோதனை? ஓஹோ...இதுவும் ஒரு பிளானிங்கா, நானே ஹீரோ, நானே வில்லன், நானே தியாகி என அசீமை கிண்டலடித்துள்ளார்.

சினம் கொண்ட சிங்கம்
சினம் கொண்ட சிங்கத்தை சிறையில் அடைத்தால், அது செல்லையே சிதைச்சிடும். அசீம் பக்காவா பிளான் போட்டு விளையாட்டை விளையாடி வருகிறார். வெளியில் வந்ததும் வட்டியும் முதலுமாக திருப்பி தருவார் என்று பதிவிட்டுள்ளார்.

மக்கள் மன்னிக்க மாட்டார்கள் அசீம்
வெள்ளிக்கிழமை மட்டும் நல்லவன் வேஷம் போட்டு, அசீம் மக்களை ஏமாற்றப்பார்க்கிறார். மக்கள் அவரை மன்னித்து விடுவார்கள் என்று நினைக்கிறார். வழி இல்லை கமல்ஹாசன் சார் இந்த வாரம் அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்தே ஆச வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

வளர்ப்பு சரியில்லை
இந்த ஆண்கள் மெத்தையில் படுத்து தூங்குவதும், பெண்ணை தரையில் படுத்து தூங்குவதும் என்ன என என்னால், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ராம் ஜனனி சிறையில் இருந்த போது, ராம் உயரமாக இருப்பதால் அவரால் கீழே தூங்க முடியவில்லை. ஆனால், அசீம், ஷிவினுக்கு மெத்தை கொடுக்காமல் தரையில் படுக்கவைத்திருக்கிறார். இந்த முறை தொடரும் போல் தெரிகிறது. வளர்ப்பு சரியில்லை.

தடவல் மன்னன்
பல மிச்சர்கள் தடவல் மன்னன்கள் இருக்கும் போது எதுக்குடா கேள்வி கேட்ட ஒரே காரணத்திற்காக ஷிவினை ஜெயிலுக்கு அனுப்புறீங்க என கேள்வி கேட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டில் விஜே கதிரவன் , ராம் இருவரும் மிச்சர் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











