twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு...ஆயிஷாவை தோலுரிக்கும் கமல்!

    |

    சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கமல், வரம்பு மீறிய போட்டியாளர்களை அடுக்கடுக்கான கேள்வி கேட்டு தோலுரித்து விட்டார்.

    ரொம்ப நாட்களுக்கு பிறகு ஆண்டவரின் ஆட்டத்தைப் பார்த்து பூரித்து போன ரசிகர்கள் இணையத்தில் அவரை தாறுமாறாக பாராட்டி வருகின்றனர்.

    இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதிலும், ஆயிஷாவை சும்மா மிரட்டுகிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் இன்னைக்கும் தரமான சம்பவம் இருக்கு என்று நிகழ்ச்சியை பார்க்க இப்போதே ரெடியாகி விட்டார்கள்.

    புருஷன வச்சிருக்கான்னு சண்டை போட்ட தான் பர்சனல்.. பிக் பாஸ் தனலட்சுமி கேம் குறித்து பேசிய வனிதா! புருஷன வச்சிருக்கான்னு சண்டை போட்ட தான் பர்சனல்.. பிக் பாஸ் தனலட்சுமி கேம் குறித்து பேசிய வனிதா!

    அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்

    அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும்

    இந்த வார பொம்மை டாஸ்கில் பிக்பாஸ் வீட்டில் சண்டை வெடித்தது. போட்டியின் போது செரீனாவை தனலட்சுமி தள்ளிவிட்டதாக அசீம் கத்தி ஆர்ப்பாட்டமே செய்து விட்டார். ஆனால் இதனை மறுத்த தனலட்சுமி, நான் யாரையும் தள்ளிவிடவில்லை, நான் தவறு செய்திருந்தால் எல்லோரிடமும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு விட்டு வெளியே போக தயார் என்றும் ஆனால் நான் தவறு செய்யவில்லை என்று தெரிந்தால் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார்.

    முதல் குறும்படம்

    முதல் குறும்படம்

    பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த கமல் குறும்படம் போடவா என தனலட்சுமியிடம் கேட்க, அவரும் நிச்சயமாக நான் யாரையும் தள்ளவில்லை உறுதியாக போடுங்க என்றார். நேற்று இந்த சீசனின் முதல் குறும்படம் போடப்பட்டது. அதில் தனலட்சுமி தள்ளிவிடவில்லை என்பது தெரிந்ததால், அசீம் தனலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் அசீமை பல கேள்விகள் கேட்டு விளாசி தள்ளினார் கமல்.

    லெஃப்ட் அண்ட் ரைட்

    லெஃப்ட் அண்ட் ரைட்

    இதற்கு பதில் எதுவும் சொல்ல முடியாமல் அசீம் அமைதியாக நின்றார். அதே போல ஷெரினா, ஆயிஷா, மணிகண்டன் என ஒவ்வொரின் பெயரையும் தனித்தனியாக சொல்லி அவர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். குறிப்பாக அசீமை கண்டிக்கிறேன், மணிகண்டன் உங்களை எச்சரிக்கிறேன் என்று நேற்றைய எபிசோட் சும்மா ரணகளமாக இருந்தது.

    இரண்டாவது ப்ரோமோ

    இரண்டாவது ப்ரோமோ

    இதையடுத்து,இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில், கமல் ஹாசன், ஆயிஷாவிடம் நீங்கள் ரச்சிதா பொம்மையை எடுத்துக்கிட்டு டால் ஹவுஸ்க்கு போனீங்களா என கேட்கிறார். இதற்கு, ஆயிஷா எனக்கு, சத்தியமா தெரியாது, ரச்சிதா பொம்மையை தடுக்கும் பிளான் இருந்தது என்று கூற, குறுக்கிட்ட ரச்சிதா,விளையாட வேண்டும் என்று ஆசைபடும் என் பொம்மை உள்ளே வந்து இருக்கலாம் என்றார்.

    இன்னைக்கு தரமான சம்பவம்

    இன்னைக்கு தரமான சம்பவம்

    இதையடுத்து,விளையாட ஆசைப்படாத நீங்கள், அசீம் எடுக்க சொன்னார் என்பதற்காக அவருடைய பொம்மையை எடுத்துக்கொண்டு போய்விட்டீர்கள் ஏன் என்று கேட்க முதலில் யாரும் எடுத்துக்கொண்டு போகசொல்லவில்லை என்ற ஆயிஷா பின் அசீம் அண்ணா எடுத்துட்டு போக சொன்னார் என உண்மையை உடைக்கிறார். சோ இன்னைக்கு தரமான சம்பவம் இருக்கு என ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

    English summary
    bigg boss tamil season 6 : October 30th episode First promo
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X