ஆயிஷாவின் இரட்டை ஆட்டம்..அப்பாவி நாடகம்..அனைத்தும் க்ளோஸ்..ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோட் காரசாரமாக இருந்தது, கமல்ஹாசன் அசீமை கடுமையாக எச்சரித்தார்.
கமல்ஹாசன் என்னை செமயா செஞ்சுட்டாரு என்று அசீமே கூறுமளவுக்கு நேற்றைய எபிசோடு பரபரப்பாக இருந்தது.
நேற்றைய எபிசோடை பார்த்து மிரண்டு போன ரசிகர்,அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முதல் ப்ரோமோ
இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோவில், கமல்ஹாசன், ஆயிஷாவிடம் நீங்கள் ரச்சிதா பொம்மையை எடுத்துக்கிட்டு டால் ஹவுஸ்க்கு போனீங்களா? என கேட்டு மாஸ் காட்டி உள்ளார். விளையாட ஆசைப்படாத நீங்கள், அசீம் எடுக்க சொன்னார் என்பதற்காக அவருடைய பொம்மையை எடுத்துக்கொண்டு போய்விட்டீர்கள் ஏன்? என அடுக்கடுக்காக கேள்வி கேட்டார். ஆண்டவரின் அடுக்கடுக்கான கேள்வியால், ஆயிஷாவின் முகம் பல கோணத்திற்கு மாறியதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

சரியான நோஸ்கட்
உடம்பு முடியல, நான் விளையாட்டுக்கு வரல என திரிந்து கொண்டிருந்த ஆயிஷாவுக்கு சரியான நோஸ்கட் கொடுத்துள்ளார். இன்றைய ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள்,சும்மா இன்னசெண்ட் மாதிரி நடிச்சுகிட்டு இருக்கும் ஆயிஷாவை ஒரு மிதி மிதிச்சாரு ஆண்டவர்... Unexpected twist அதான் என பதிவிட்டுள்ளார்.

ஐயோ சத்தியமா எனக்கு தெரியாது
நீங்க தான் விளையாடவில்லையே, அப்போ எதுக்கு ஆயிஷா, நீங்க ரச்சிதா டாலை எடுத்தீங்க... ஆயிஷா : ஐயோ சத்தியமா எனக்கு தெரியாது..இப்பா அது வந்து... நான் என்ன சொல்றது என மாற்றி மாற்றி பேசியதை ஒரு நெட்டிசன் கிண்டலடித்துள்ளார்.

ஜால்ரா மணிகண்டன்
நேற்று மீரா அசீம், மயக்க நடிப்பு ஷெரின், விஷம் ஆயிஷா,ஜால்ரா மணிகண்டன் மற்றும் எல்லோருயும் வைச்சு செய்தார். கமலின் நேற்றைய எபிசோடு சிறப்பாக இருந்தது. பெரும் பான்மையான ஓட்டு போடாத, பிக் பாஸ் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இரட்டை ஆட்டம்..அப்பாவி நாடகம்
ஆயிஷாவின் இரட்டை ஆட்டம், அப்பாவி நாடகம் & கிசுகிசுப்பான பெண் உருவம் அனைத்தும் கமல் சார் இன்று அடித்து நொறுக்கப்பட்டது. கடந்த வாரம் பாராட்டப்பட்டது, இந்த வாரம் உணர்ச்சிவசப்பட்டது. அவள் ஒரு வாரத்தில் கருணையிலிருந்து மிகக் கடினமான மற்றும் வேகமான வீழ்ச்சியைப் பெற்றாள். மறுபடியும் அவள் தெரில புரில என்ற நாடகத்தை ஆரம்பித்துள்ளார்.

சும்மா உருட்டுகிறார்
தனலட்சுமி பற்றி ஆயிஷா பேசியது வீடியோ ஆதாரம் தெளிவாக உள்ளது. அவள் தனலட்சுமியை மட்டுமே தெரிவித்தாள், அவள் உன்னைத் தள்ளவில்லை, சும்மா உருட்டு உருட்டுகிறார்.


Click it and Unblock the Notifications











