“எவன் வந்தாலும் தூக்கி போடு“.. தலைகீழாக மாறிய பிக்பாஸ் வீடு குழப்பத்தில் ரசிகர்கள்!

சென்னை : விஜய் டிவியின் பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கியது.

மூன்று வாரத்தை நிறைவு செய்து 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதில் ஜிபிமுத்து, மெட்டி ஒலி சாந்தி, அசல் கோலார் ஆகியோர் வெளியேறி உள்ளனர்.

தற்போது, இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், போட்டியாளர்கள் ஜாலியாக விளையாடி வருகிறார்கள்.

வெளியேறிய அசல் கோலார்

வெளியேறிய அசல் கோலார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்களில் சிலர் கமலிடம் நன்றாக வாங்கிக்கொண்டனர். அதை தொடர்ந்து, அனைவரையும் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட அசல் கோலார், குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். அசல் வெளியேறியதால் கண்டெண்ட் கிடைக்காமல் பிக் பாஸ் பார்வையாளர்கள் புலம்பி வருகின்றனர்.

இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்

இந்த வார நாமினேஷன் ப்ராசஸ்

இந்நிலையில், காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், இந்த வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் தொடங்கி உள்ளது. இதில், கன்ஃபெஷன் அறைக்கு சென்று, ரொம்ப மானிபுலேட் பண்றாங்க, அத்துமீறி பேசுவது பிடிக்கவில்லை , பிரச்சனையை பெரிது படுத்துவது பிடிக்கவில்லை , எந்த சண்டையிலும் கலந்து கொள்வதில்லை என மற்றவர்களை பற்றிய குறைகளை கூறி நாமினேட் செய்துள்ளனர். இதில் அசீம், ஷெரினா, ஆயிஷா,கதிரவன், விக்ரமன் ஆகியோரின் பெயர் நாமினேஷன் பட்டியலில் உள்ளது.

எவன் வந்தாலும் தூக்கி போடு

எவன் வந்தாலும் தூக்கி போடு

இதில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், எவன் வந்தாலும் உள்ள தூக்கி போடு என அமுதவாணன் சொல்ல, ஜனனி மற்றும் தனலட்சுமி விக்ரமனை குண்டுகட்டாக தூக்கி சென்று நீச்சல் குளத்தில் போடுகின்றனர். இதையடுத்து, வரம் கொடுத்தவன் தலையில் கையை வைப்பது போல, தூக்கி உள்ளே போடுனு சொன்ன அமுதவாணனுக்கே ஆப்பு வைத்து அவரையே தூக்கி நீச்சல் குளத்தில் போட்டுவிட்டனர்.

இவ்ளோ சந்தோசமா இருந்தா எப்படி

இவ்ளோ சந்தோசமா இருந்தா எப்படி

ஒருவர் பின் ஒருவராக நீச்சல் குளத்தில் குதித்து குதித்து விளையாடுகிறார்கள். காலையில் என்னென்ன சொல்லி நாமினேஷன் செய்ய முடியுமோ எல்லாத்தையும் செய்து விட்டு மாலையில் அனைவரும் ஒன்றுமே தெரியாத மாதிரி விளையாடுறாங்க. போட்டியாளர்கள் ஜாலியாக விளையாடுவதை பார்த்து காண்டான ஒரு நெட்டிசன், நீங்க இவ்ளோ சந்தோஷமா இருந்தா நாங்க எப்படி சந்தோஷமாக இருக்கிறது என கேட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X