பிக் பாஸ் வீட்டில் சவுண்டு சரோஜாவாக மாறிய ரச்சிதா.. ஆடிப்போன ஹவுஸ்மேட்ஸ்... என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6ல் முதல் வாரத்தில் இருந்தே போட்டியாளர்களை மிக்சர் சாப்பிட்டுட்டு சும்மா இருங்க என பிக் பாஸ் விடவில்லை.
க்ளீன் பண்ணும் டாஸ்க்கில் கூட ரசிகர்களை எண்டர்டெயின் பண்ண வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகவே சொல்லி வருகிறார்.
இந்நிலையில், மைக் ஒன்றை வைத்து யாரு சரியான சவுண்ட் பார்ட்டி என்பதை கண்டறியும் டாஸ்க்கில் ரச்சிதா கத்திய கத்து இருக்கே, ஹெட்ஃபோன் மாட்டிக் கொண்டு பார்த்தவர்களின் காதுகள் எல்லாம் பஞ்சர் ஆகியிருக்கும்.

எல்லாமே இருக்கு
கடந்த அக்டோபர் 9ம் தேதி ஆரம்பமான பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னடா போட்டியாளர்கள் எல்லாம் யாரும் அதிகமா தெரிஞ்ச மூஞ்சா இல்லையே என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஒருசில தெரிந்த முக போட்டியாளர்களின் ஆரம்ப பர்ஃபார்மான்ஸே அசத்தலாக இருப்பதை பார்த்து ரசிகர்கள் விஜய் டிவியில் மட்டும் இல்லை ஹாட்ஸ்டாரிலும் டைம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கலாம் என ரீசார்ஜ் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

சும்மா கத்திக்காட்டு
யாரு பெரிய ஆளுன்னு பேசிக்கிட்டு இருந்தா எப்படி? சும்மா அடிச்சிக்காட்டு என்பது போல, பிக் பாஸ் போட்டியாளர்களில் டஃப் கன்டெஸ்டன்ட் யாருன்னு சும்மா கத்திக்காட்டு என பிக் பாஸ் மைக் கொடுக்க, ஆண் போட்டியாளர்களும், பெண் போட்டியாளர்களும் மாறி மாறி கத்தினர்.

தலைவன் ஜிபி முத்து செம
ஓவர் பில்டப்புடன் முதல் ஆளாக சென்ற அசீம் கத்த ஆரம்பிக்க டெக்னிக்கல் கோளாறு எற்பட்டு விட்டது. பின்னர், தொண்டை கட்டிக் கொண்டது என மற்றவர்களை கத்தச் சொன்னார். விக்ரமன், ராபர்ட் மாஸ்டர் எல்லாம் கத்திய நிலையில், நம்ம தலைவன் ஜிபி முத்து சென்று பயங்கரமாக கத்த 1.5 டெசிபல் என ஆண் போட்டியாளர்களில் வெற்றிப் பெற்றார்.

சவுண்டு சரோஜா
அடுத்து பெண் போட்டியாளர்களும் கத்த தொடங்கினர். மக்கள் போட்டியாளரான தனலக்ஷ்மி பயங்கரமாக கத்த 1.3 டெசிபல் சத்தம் வந்தது. சாந்தி 1 டெசிபலுக்குத்தான் கத்தினார். கடைசியாக எனக்கு எல்லாம் எப்படி பாஸ் கத்தத் தெரியும் என பாவப்பட்ட புள்ள போல மூஞ்சியை வைத்துக் கொண்டு ரொம்பவே அமைதியாக ஓகே பிக் பாஸ்னு சொல்லிட்டு பஜ்ஜர் அடித்ததும் தான் ஒரு சவுண்டு சரோஜா என்பதை நிரூபித்து பிக் பாஸ் வீட்டையே அலற வைத்தார் ரச்சிதா மகாலட்சுமி.

இவ்ளோ சவுண்டா
2.4 டெசிபலுக்கு அதிகமாக சத்தம் வரும் அளவுக்கு ரச்சிதா மகாலட்சுமி கத்தியதை பார்த்து ஒட்டுமொத்த பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸே அரண்டு போய் விட்டனர். இதற்கு மேல் ரச்சிதாவிடம் எந்தவொரு வம்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என பலரது மைண்ட் வாய்ஸ் சத்தமாகவே சொல்லியது. முதல் முறையாக கத்தியதற்கு பிக் பாஸ் தான் பாராட்டினார் என்றும் ரச்சிதா பேசியதை பார்த்து ரசிகர்களும் ஷாக் ஆகி உள்ளனர். ரச்சிதா கத்திய வீடியோவை சோஷியல் மீடியாவில் அதிகளவில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

ஹேஷ்டேக் டிரெண்டிங்
#RachithaMahalakshmi என்கிற ஹேஷ்டேக்கை போட்டு, இவர் எல்லாம் எங்கே கத்தப் போறாருன்னு தப்புக் கணக்கு போட்டுவிட்டோம் என ரச்சிதாவின் குரலை கேட்ட பிறகு நெட்டிசன்கள் டிரெண்டிங்கை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஏகப்பட்ட பேர் அந்த வீடியோவை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











