Don't Miss!
- Sports
6 பந்தால் தோல்வியை தழுவிய இந்தியா.. தனி ஆளாக போராடிய வாசிங்டன் சுந்தர்.. காலை வாரிய டாப் ஆர்டர்
- News
கடைசி பஸ் வருவதற்கு முன்பே கிளம்பிய விமானம்.. பயணிகள் கடும் அவதி.. ரூ.10 லட்சம் ஃபைன் போட்ட டிஜிசிஏ!
- Finance
கௌதம் அதானி தூக்கத்தைக் கெடுத்த Hindenburg.. இந்த நிறுவனம் யாருடையது தெரியுமா..?
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
இனி கணவரோடு சேர்ந்து வாழ மாட்டாரா?ரச்சித்தாவின் முடிவால் ஷாக்கான ரசிகர்கள்!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் ரச்சித்தா குழந்தை குறித்து பேசி உள்ளதால் இனி அவர் கணவரோடு சேர்த்து வாழவே மாட்டாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் ரச்சித்தா மகாலட்சுமி. அந்த சீரியலைத் தொடர்ந்து பிரிவோம் சந்திப்போம், நாச்சியார்புரம், சொல்ல மறந்த கதை போன்ற சீரியலிலும் இவர் நடித்துள்ளார்.
சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த ரச்சித்தாவுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. இதனால், நாமினேஷனில் வந்தாலும் தப்பித்து விடுகிறார்.
என் 35 வயதில் அதை நிச்சயமா செய்வேன்..விக்ரமனிடம் தன் கனவை சொன்ன ரச்சித்தா!

நடிகை ரச்சித்தா
நடிகை ரச்சித்தா, பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் இணைந்து நடித்த நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இருவரும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் சீரியலில் இணைந்து நடித்தனர். ஆனால், அந்த சீரியல் கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டது.

கணவரை பிரிந்தார்
மனம் ஒத்த தம்பதிகளாக இருந்த இவர்களுக்குள் இடையில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. ஆனால், சோஷியல் மீடியாவில் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற செய்திகள் பரவின. அதேபோல, சொல்லமறந்தக்கதையில் கணவனை இழந்து இரண்டு குழந்தைகளை வளர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்த ரச்சித்தா இந்த கதாபாத்திரமும், என் வாழ்க்கையும் ஒன்று என கூறியிருந்தார்.

தற்காலிகமான பிரிவுதான்
இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், இதுகுறித்து பேசிய ரச்சித்தாவின் கணவர் நடிகர் தினேஷ், சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து இருக்கிறோம் அவ்வளவுதான் என்றும், எங்கள் இடையிலான பிரிவு தற்காலிகமானதுதான். மற்றபடி நானும், ரச்சித்தாவும் சட்ட பூர்வமாக பிரிவதற்கான எந்த ஒரு முயற்சியையும் இந்த நிமிஷம் வரைக்கும் எடுக்கவில்லை என்று கூறி இருந்தார். இதனால், இருவரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சேர்த்துவிடுவார்கள் ரசிகர்கள் நினைத்து இருந்தனர்.

ரசிகர்களின் ஆதரவில்
ரச்சித்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததில் இருந்து, தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார் ரச்சித்தா. இதனால் போட்டியாளர்கள் பலரும் அவர் இயல்பாகவே இல்லை என்றும், பிக் பாஸ் வீட்டில் அவர் சேஃப் கேம் விளையாடி வருவதாகவும் கூறி அவரை அடிக்கடி நாமினேட் செய்து வருகின்றனர்.

என் லட்சியம் இதுதான்
இந்நிலையில், ரச்சித்தா குழந்தை குறித்து பேசி உள்ள தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது, என்னோட 35வது வயதில் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்பேன் என்றார். தத்து எடுப்பதற்கு என்று நிறைய விதிமுறை இருக்கு அதற்காக காத்து இருக்கிறேன் என்றும், அதுவும் பெண் குழந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் விக்ரமனிடம் தனது வாழ்க்கையின் லட்சியத்தைப்பற்றி பேசி இருந்தார்.

குழப்பத்தில் ரசிகர்கள்
இவர்கள் இருவரும் பேசிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலனதை அடுத்து ரசிகர்கள் பலர் ரச்சித்த உங்களுக்கு தங்கமான மனசு என்று வாழ்த்து தெரிவித்து வந்தாலும், ஒரு சில ரசிகர்கள் குழந்தையை தந்து எடுப்பேன் என்றால் என்ன அர்த்தம், கணவரோடு சேர்த்து வாழ்ந்து குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டீர்களா? இனி கணவரோடு சேர்த்து வாழும் எண்ணமே இல்லையா? என கேட்டு வருகின்றனர்.