ராபர்ட் மாஸ்டர் 22 வயது பெண்ணை காதலித்தாரா? இது எப்போ?அவரே வாய் கொடுத்து மாட்டிக்கிட்டாரே?

சென்னை : ராபர்ட் மாஸ்டர் 22 வயது பெண்ணை காதலித்த விஷயத்தை பிக் பாஸ் வீட்டில் உளறியதால், இது எப்போடா என ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் விரும்பினாலும், சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியா வேண்டாம்டா சாமி என்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் மக்கள் மத்தியிலும் பேசுபொருளாக இருக்கும்.

ராபர்ட் மாஸ்டர்

ராபர்ட் மாஸ்டர்

பிக் பாஸ் சீசன் 6ன் போட்டியாளர்களில் ஒருவரான ராபர்ட் மாஸ்டர் கதை சொல்லட்டுமா டாஸ்கில் தனது கதையை கூறினார். அதில் சிறுவயதில், போலியாவால் பாதிக்கப்பட்டிருந்தேன், என் தந்தையின் உதவியால் உடல்நிலை சரியாகி தற்போது டான்ஸ் மாஸ்டராக இருக்கிறேன். நான் சிறுவயதிலேயே காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நான் படிக்கவில்லை என்பதால், என் மனைவி பிரிந்து சென்று, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு முறை என் மகளை கடையில் பார்த்தேன் அவள் என்னை அங்கிள் என்று கூப்பிட்டதாக கண்கலங்கி பேசினார்.

புது காதல் கதை

புது காதல் கதை

ராபர்ட் மாஸ்டர் வீட்டிற்குள் ஒரு காதல் ட்ராக்கை ஓட்டிக்கொண்டு இருக்கிறார். ரச்சிதாவை பார்ப்பது, மூக்குத்தி என்று செல்லமாக அழைத்து வருகிறார். ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை பார்க்கும் விதமே அவர் காதலிப்பதை சொல்கிறது என கூறி பிக் பாஸ் பார்வையாளர்கள். ராபர்ட் மற்றும் ரச்சிதாவை சேர்த்து வைத்து ஹேஷ்டேக்கை உருவாக்கி வருகின்றனர்.

ஆயிஷாவால் வருத்தப்பட்ட ராபர்ட்

ஆயிஷாவால் வருத்தப்பட்ட ராபர்ட்

இந்நிலையில், சனிக்கிழமை எபிசோடில், அனைவருடைய பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு தேவைப்படும் பொம்மையை எடுத்து அந்த போட்டியாளரை பற்றி பேசலாம் என்றார். ஆயிஷாவின் பொம்மையை எடுத்து பேச ஆரம்பித்த ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா பேசியது எனக்கு பிடிக்கவில்லை, மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது.

காதலுக்கு வயசு இல்ல

காதலுக்கு வயசு இல்ல

எனக்கு வயசு 41, அந்த பொண்ணோட வயசு 22 இந்த காதல் பற்றி நான் ஆயிஷாவிடம் சொல்லி இருந்தேன். ஆனால், அவர் என்னுடைய வயதை சுட்டிக்காட்டி காதலை அசிங்கப்படுத்திவிட்டார். அதேயே சொல்லி சொல்லி கிண்டலடித்து வருகிறார். காதலுக்கும் வயதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, காதல் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரும் என்றார்.

22 வயது பெண்ணை காதலித்தாரா?

22 வயது பெண்ணை காதலித்தாரா?

ராபர்ட் மாஸ்டர் சொன்னதை பக்காவாக நோட் செய்த ரசிகர்கள், என்னது ராபர்ட் மாஸ்டர் 22 வயது பெண்ணை காதலித்தாரா? இது எப்போ நடந்த கதை என்றும், அப்போ ரச்சிதா சைட் அடிப்பது எல்லாம் சும்மா என்றும் பிக் பாஸ் பார்வையாளர்கள் மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X