Don't Miss!
- News
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! குடியரசுத் தலைவர் முர்மு உரை நிகழ்த்துகிறார்!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
ஓபன் நாமினேஷனில் சிக்கிய போட்டியாளர்கள்..இந்த வாரம் வெளியேறப் போது யார்?
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 43 நாட்களை கடந்துள்ளதால் வீடே மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது.
இந்த வாரம் நிவாஷினி வெளியேறி உள்ளதால், அடுத்தடுத்த நாட்களில் யார் வெளியேறுவார்? யார் டைட்டிலை பெறுவார் என்று பிக் பாஸ் பிரியர்கள் இப்போதே யூகிக்கத் தொடங்கிவிட்டனர்.
இந்த வாரம் ஓபன் நாமினேஷன் நடந்துள்ளதால், முகத்திற்கு நேராக ஒரு போட்டியாளர்களும் சக போட்டியாளர்கள் மீது கடுப்பில் உள்ளனர்.
வசனத்துல 'டா' இருந்தா எடுக்க சொல்வாரு... பிக் பாஸ் அசீம் பற்றி சக நடிகர்

பிக் பாஸ் சீசன்6
பிக் பாஸ் சீசன்6ன் நேற்று திங்கட் கிழமை என்பதால் கேப்டன் பதவிக்கான டாஸ்க், நாமினேஷன் என வீடே சுறுசுறுப்பாக இருந்தது. இதில் தனலட்சுமி, கதிர், மைனாவுக்கும் இடையே கேப்டன் பதவிக்கான போட்டி நடைபெற்றது, இதில், மைனா வெற்றி பெற்று இந்த வாரத்தின் கேப்டனார். இதற்கு முன்பே மைனா கேப்டனாக இருந்து இருக்கிறார்.

தனலட்சுமிக்கு மரியாதை தெரியல
இதையடுத்து, இந்த சீசனின் முதல் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் தனலட்சுமி பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றும், தனம் இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்று அசீம் தனலட்சுமியை நாமினேட் செய்தார். இதையடுத்து, விக்ரமன் தனலட்சுமி எதற்கு எடுத்தாலும் சண்டை போடுவதாக கூறி அவரை நாமினேட் செய்தார்.

7 பேர் நாமினேஷனில்
ஷிவின் அசீமையும், ரச்சிதா ராபர் மாஸ்டரையும் நாமினேட் செய்தனர். இதில் தனலட்சுமி மற்றும் அசீமை அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் தனலட்சுமி, அசீம் ,ராம், மணிகண்டன், அமுதவாணன், கதிரவன் ,ராபர்ட் என ஏழு பேர் நாமினேட் ஆகி உள்ளனர்.

வெளியேறுவது யார்?
அசீம் மற்றும் தனலட்சுமி அதிகமாக வீட்டிற்குள் சண்டை போட்டாலும் அவர்களுக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது. இதனால், இவர்கள் இந்த வாரம் வெளியில் போக வாய்ப்பு இல்லை. அதே போல அழுதவாணன் ,மணிகண்டன் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என்பதால், அவர்களும் வெளியேற வாய்ப்பில்லை. இதில் டேன்ஜர் ஜோனில் இருப்பது ராபர்ட் மாஸ்டர், கதிர், ராம் தான். கடந்த சில நாட்களாகவே ராம் வீட்டில் மிக்ஸர் சாப்பிட்டு வருவதாக மக்கள் கிண்டலடித்து வரும் நிலையில் இந்த வாரம் ராம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.