Don't Miss!
- News
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்! குடியரசுத் தலைவர் முர்மு உரை நிகழ்த்துகிறார்!
- Automobiles
இன்சூரன்ஸை கிளைம் செய்ய முடியாமல் அவதிக்குள்ளாகும் கியா ஹூண்டாய் கார் உரிமையாளர்கள்... இதற்கான காரணம் என்ன?
- Lifestyle
Today Rasi Palan 31 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடலாம்...
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
பிக் பாஸில் இருந்து வெளியே வந்ததும் மாஸ் காட்டும் ராபர்ட் மாஸ்டர்..யாரை சந்தித்தார் தெரியுமா?
சென்னை : பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை எட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இதில் நேற்றைய எபிசோடில் ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளை பெற்று வீட்டிலிருந்து வெளியேறி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தினார்.
தற்போது பிக் பாஸ் வீட்டில் அசீம்,விக்ரமன், அமுதவாணன், ராம்,கதிர், மணிகண்டன், ஏடிகே, ரச்சித்தா,மைனா,குயின்ஸி, தனலட்சுமி,ஆயிஷா,ஷிவின் என 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
சும்மாவே இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு இவ்ளோ சம்பளமா…? லட்சங்களை சம்பளமாக வழங்கிய பிக் பாஸ்!

ராபர்ட் மாஸ்டர்
பிக் பாஸ் வீட்டிற்குள் 21 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே வந்த நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டர் அனைவரிடத்திலும் மிகவும் அன்பாகவே பழகி வந்தார். சக போட்டியாளர்களை டார்லிங்... டார்லிங்... என்று அழைத்து அனைவர் மனதிலும் இடம்பிடித்தார். வீட்டிற்குள் வந்த இரண்டாவது நாளே ரச்சித்தாவிடம் நட்பாக பழக விரும்புவதாக பிட்டை போட்டு அவர், பின் சுற்றிக்கொண்டே இருந்தார்.

சைட் அடிப்பது தான் வேலை
ரச்சித்தா எந்த டீமில் இருக்கிறாரோ அங்கே இருப்பதும், தூரத்தில் இருந்து சைட் அடிப்பதும், ஏக்க பெருமூச்சு விட்டு காதல் பாட்டு பாடுவதுமாகவே இருந்தார். முதல் நான்கு வாரங்கள் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடி வந்த ராபர்ட் மாஸ்டர் நாட்கள் செல்ல செல்ல ரச்சித்தாவை சைட் அடிப்பதையே முழுநேர வேலையாக செய்து வந்தார்.

வெளியேறினார்
கடந்த வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில் ரச்சித்தா, ராபர்ட் மாஸ்டர் வீட்டில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார் இதனால் , நான் அவரை நாமினேட் செய்கிறேன் என கூறி ராபர்ட் மாஸ்டரை சங்கடத்தில் ஆழ்த்தினார். ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவிடம் நடந்து கொண்டவிதம் கிரிஞ்சாக இருந்தாலும், தற்போது அவர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

ரச்சித்தா இது நியாயமா?
ரச்சித்தாவால் தான் ராபர்ட் விளையாட்டில் கவனம் செலுத்தி விளையாடவில்லை என்றும், அவர் வரம்பு மீறி பேசும் போது ரச்சித்தா அவரை கண்டித்து இருக்க வேண்டும், அதைவிட்டு விட்டு, எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு கடைசியில் நாமினேஷன் செய்து அவரை வெளியில் அனுப்பியது நியாயமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஐ மிஸ் யூ டார்லிங்
இதையடுத்து, நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் சக போட்டியாளரான அசல் கோலாரை சந்தித்து பேசியுள்ளார். இவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டே போட்டோ இணையத்தில் டிராண்டாகி வருகிறது. ரசிகர்கள் பலரும் ஐ மிஸ் யூ டார்லிங் என்று கமெண்ட் பாக்சை நிரப்பி வருகிறார்கள்.