அந்த கண்ண பாத்தாக்கா..லவ்வு தானா தோனாதா..ரச்சிதாவை விரட்டி விரட்டி சைட் அடிக்கும் ராபர்ட் மாஸ்டர்!

சென்னை : கண்டெண்ட் இல்லாமல் அலைந்து கொண்டிருந்த இணையவாசிகளுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி கண்டெண்டை வாரி வாரி கொடுத்து வருகிறது.

ஒரு பக்கம் தடவல் மன்னன் அசல் கோலாரு செய்யும் சேட்டைகளும், மற்றொரு பக்கம் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா லவ் ட்ராக் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.

ரச்சித்தா மற்றும் ராபர்ட் மாஸ்டரும் எப்போதும் ஒன்றாக சுற்றி வருவதால், நெட்டிசன்கள் பலர் இவர்களை கேலி செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் காதல்

பிக் பாஸ் காதல்

பிக் பாஸ் சீசன் ஐந்திலும் ஒரு சூப்பரான லவ் ட்ராக் ஓடியது. இப்போது ராபர்ட் மாஸ்டர் எப்படி ரச்சிதாவை சுற்றி வருகிறாரோ அதே போல, அபிநய், பாவ்னியை சுற்றி வந்தார். இதனால், ஹவுஸ்மெட்டுகள் அனைவருக்கும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக சந்தேகம் வந்தது. ராஜூ, ஒரு டாஸ்கின் போது அபிநய்யிடம் பாவ்னியை காதலிக்கிறார்களா என கேட்டதால், வீட்டில் பெரும் சண்டையே வெடித்தது.

அமீர் பாவ்னி காதல்

அமீர் பாவ்னி காதல்

இதையடுத்து, வைல்டு கார்டு என்ரியாக உள்ளே வந்த அமீர், பாவ்னியிடம் நெருங்கி பழகினார். அவரை காதலிப்பதாக கூறி பாவ்னி பின்னால் சுற்றிக்கொண்டே இருந்தார். இந்த காதல் ஜோடி வெளியில் வந்த பிறகும் பல நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டனர். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

ரச்சிதா ராபர்ட் மாஸ்டர்

ரச்சிதா ராபர்ட் மாஸ்டர்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல் இல்லாத சீசனே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்தவகையில் இந்த சீசனில், ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை வந்ததும் வராததுமாக எனக்கு உங்களுடன் நட்பாக பழக ஆசை என்றும், உங்களை பார்ப்பதற்காகவே சீரியல் பார்ப்பேன் என்றும் காதல் ட்ராக்கை ஓட்டினார். அது மட்டும் இல்லாமல்,எனக்கு ரச்சிதா மேல் க்ரஷ் இல்லை..ஆனால் பிடிக்கும் என்று ஓபனவே சொல்லி இருக்கிறார்.

நிஜமாவே காதலா?

நிஜமாவே காதலா?

ரச்சிதா புடவை கட்டி நடந்து வந்ததை பார்த்து சைட் அடித்த வீடியோவை பாட்டுடன் எடிட் செய்து கண்டெண்ட் ஆக்கி வருகின்றனர். ஒரு வேலை நிஜமாகவே இவர்களுக்குள் காதல் இருக்குமோ என்ற சந்தேகம் இந்த எடிட் வீடியோவை பார்த்ததும் நமக்கே தோன்றுகிறது. இணையத்தில் பரவி வரும் இவர்களின் வீடியோக்களுக்கு பல கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

செம எடிட்டிங்

செம எடிட்டிங்

ரச்சித்தா மகாலட்சுமி மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் எப்போதும் ஒன்றாக இருந்து வருகின்றனர். பொம்மை டாஸ்கிலும் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் காட்சிகளை பக்காவாக எடிட் செய்து, ஒரு காதல் பாட்டை போட்டு டிராண்டாக்கி உள்ளனர். எது எப்படியோ நமக்கு இன்னும் மூனு மாசத்திற்கு கண்டெண்ட்டில் குறையே இருக்காது என மனசு நிறைந்த சந்தோஷத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X