ஹாய் டார்லிங்..நான் வந்துட்டேன்..ரசிகர்களுக்காக ராபர்ட் மாஸ்டர் வெளியிட்ட வீடியோ!

சென்னை : பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்காக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் ஒரு பாடல் காட்சிக்கு ஓரமாக நடனமாடிய ராபர்ட் மாஸ்டர் சரியான வாய்ப்பை பயன்படுத்தி கோரியோகிராபர் ஆனார்.

சிம்பு நடித்த குத்து படத்தில் போட்டு தாக்கு பாடல் இவரது சினிமா வாழ்க்கையை அப்படியே மாற்றியது. தற்போது இவர் பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வருகிறார்.

ராபர்ட் மாஸ்டர்

ராபர்ட் மாஸ்டர்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராபர்ட் மாஸ்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியேறினார். பிக்பாஸ் 6வது சீசனில் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளராக ராபர்ட் மாஸ்டர் இருப்பார் என்று அனைவரும் நினைத்த நிலையில், விளையாட்டில் கவனம் செலுத்தாததால் தற்போது அவர் வெளியேறி உள்ளார்.

ஓவர் ரொமான்ஸ்

ஓவர் ரொமான்ஸ்

சீரியல் நடிகை ரச்சிதா பின்பு சுற்றுவதையே முக்கிய வேலையாக ராபர்ட் மாஸ்டர் செய்து வந்தார். ரச்சித்தாவை சைட் அடிப்பது ஏக்க பெருமூச்சுடன் பார்ப்பது, காதல் பாடல் பாடுவது என 24 மணி நேரமும் ரச்சித்தாவின் பின்னாலே சுற்றிக்கொண்டிருந்தார். இவரின் செயலால் ரசிகர்கள் பலர் கடுப்பானார்கள். இதனால், நாமினேஷனில் அவர் வந்ததும் வெச்சு செய்துவிட்டார்கள்.

விசில் அடித்து வரவேற்றனர்

விசில் அடித்து வரவேற்றனர்

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ராபர்ட் மாஸ்டரை அவரது நண்பர்கள் விசில் அடித்து வரவேற்றனர். காரை விட்டு இறங்கியதுமே அப்பா எங்கே...அப்பா எங்கே என கேட்டுக்கொண்டிருந்த ராபர்ட் மாஸ்டர் அப்பாவை பார்த்ததும் கட்டிப்பிடித்து கண்கலங்கினார். பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே நான் அப்பா பிள்ளை என்றும், அப்பாவை பார்க்கவேண்டும் என அடிக்கடி தனது அப்பா குறித்து பேசிக்கொண்டே இருந்தார்.

ஹாய் டார்லிங்

ஹாய் டார்லிங்

அதையடுத்து, ரசிகர்களுக்காக ராபர்ட் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஹாய் அனைவருக்கும் வணக்கம். நான் ராபர்ட் மாஸ்டர் . இப்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது எனக்கு ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி. என் ரசிகர்கள், நண்பர்கள், குட்டீஸ், அம்மா, அப்பா எல்லாரும் ஓட்டு போட்டுருக்கீங்க... டார்லிங் உங்களின் ஆதரவுக்கு நன்றி என அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X