பிக் பாஸ் சீசன் 6: முதல் எலிமினேஷன் சாந்தி.. வயசான 2 பேரையும் இப்படி ஒரேயடியா அனுப்பிட்டாங்களே!
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் எலிமினேஷன் உப்புமா மம்மி சாந்தி தான் என்பதை ஏற்கனவே கருத்துக் கணிப்பில் உறுதி செய்த நிலையில், இந்த வாரம் அதிகாரப்பூர்வமாகவே சாந்தி தான் முதல் எவிக்ஷன் என்கிற தகவல்கள் வழக்கம் போல கசிந்துள்ளன.
சாந்தி உடன் சேர்ந்து கூடுதல் இணைப்பாக இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருந்தால் நல்லா இருக்கும் என எதிர்பார்த்ததை போலவே ஜிபி முத்துவையும் பார்சல் செய்து விட்டனர்.
2வது வாரத்தில் ஒரேயடியாக இரு வயதானவர்களை வெளியே அனுப்பியது அன்ஃபேர் என்று பிக் பாஸ் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

உப்புமா மம்மி
ஏகப்பட்ட படங்களில் உதவி நடன இயக்குநராக இருந்தவர் சாந்தி. அதன் பின்னர் மெட்டி ஒலி சீரியலில் நடித்த அவருக்கு மிகப்பெரிய பிரபலம் கிடைத்தது. இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6க்கு போட்டியாளராக அவர் உள்ளே நுழையும் போதே, முதல் விக்கெட் இவர் தான் என நினைக்கத் தோன்றியது. பிக் பாஸ் வீட்டில் கடந்த 2 வாரங்களாக ரவையை வைத்து வித விதமாக உப்புமா கிண்டி போட்டு வந்த சாந்தி முதல் ஆளாக வெளியேறி உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சாந்தி வெளியேற்றம்
பிக் பாஸ் சீசன் 5ல் முதல் வாரத்தில் நமீதா மாரிமுத்து வாக்கவுட் செய்தார். இரண்டாவது வாரத்தில் நாடியா சங் வெளியேற்றப்பட்டார். அதே போன்ற ஒரு ஸ்க்ரிப்ட்டையே பிக் பாஸ் டீம் இந்த சீசனுக்கு கொஞ்சம் மாற்றி 2வது வாரத்தில் முதல் எலிமினேஷனையும் வாக்கவுட்டையும் செய்துள்ளனர் என பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கூடுதல் இணைப்பு
இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருந்தால் நல்லா இருக்கும் என சொல்லி இருந்த நிலையில், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அசீம் வெளியேறுவார் என்று பார்த்தால், அவரை கமல் மன்னிட்டு வீட்டுக்குள்ளே வைத்திருக்கிறார். ஆனால், கூடுதல் இணைப்பாக ஜிபி முத்து அவரே தான் வெளியேறுவதாக அறிவித்து விட்டு பிக் பாஸ் வீட்டை விட்டு நடையை கட்டி விட்டார். மக்களே இப்ப என்னாச்சுன்னா என ஜிபி முத்துவையே நடுவில் உட்கார வைத்து மீம்கள் பறக்கின்றன.

வயதான போட்டியாளர்கள்
இப்படி 2 வயதான போட்டியாளர்களை வெளியே அனுப்பியது ரொம்பவே அன்ஃபேர் என பிக் பாஸ் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். நிவாஷினி, ஷெரினா உள்ளிட்ட போட்டியாளர்கள் மிக்சர்கள் தின்று கொண்டிருக்கும் நிலையில், சமைத்துப் போட்ட ஆத்தாவை இப்படி வெளியே அனுப்பிட்டீங்களே என கேட்டு வருகின்றனர். ஆனால், சாந்திக்கு ரசிகர்கள் ஓட்டே ஒரு வாரமாக போடவில்லை என்பது தான் கருத்துக் கணிப்பு மூலமே தெரிந்து விட்டதே..

அடுத்த விக்கெட்
சாந்தி, ஜிபி முத்துவை தொடர்ந்து வீட்டிலேயே வயசான அடுத்த பூமர் அங்கிள் யார் என்று பார்த்தால் அது நம்ம ராபர்ட் மாஸ்டர் தான். ஏற்கனவே மகேஸ்வரியின் தொடையெல்லாம் தெரியுது என பேசி வரும் அவர் தான் அடுத்த வாரம் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. அசீமை அதிகம் பேர் நாமினேட் செய்தால், அவருக்கும் ஓட்டுக்கள் வராமல் போகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











