தனியாதான் வந்தேன்..தனியாவே போகிறேன் கண்கலங்கி வெளியேறிய ஷெரினா..கதறி அழுத ஆயிஷா!
சென்னை : ரசிகர்களின் பேராதரவோடு இந்த முறையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள்.
அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 28 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6
விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிக்கும் ரியாலிட்ரி ஷே தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. கடந்த சில சீசன்களாகவே எதிர்பார்க்கப்பட்ட முத்து முதல் இரண்டு வாரத்திலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனையடுத்து நடைபெற்ற முதல் எலிமினேஷனில் பிரபல நடன இயக்குனர் சாந்தி வெளியேற்றப்பட்டார்.

அந்த டிவி, இந்த டிவி
கடந்த வாரம் பாடகர் அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து நடைபெற்ற கடந்த வார பிக் பாஸ் நிகழ்ச்சியில் அந்த டிவி, இந்த டிவி டாஸ்க்கில் போட்டிலாளர்கள் மிகவும் அனல் பறக்க சிறப்பாக விளையாடியது ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வத்தை கூட்டியது. இந்த டாஸ்கின் போது அசீம், மகாலட்சுமி, மைனா ஆகியோர் இடையே சண்டை நடைபெற்றது.

ஷெரினா வெளியேறினார்
இந்த வாரம் ஆயிஷா, விக்ரம், அசீம், கதிரவன், ஷெரினா நாமினேஷனில் இருந்த நிலையில், சனிக்கிழமை அசீம், விக்ரமன் ஆகியோர் சேஃவ் செய்யப்படுவதாக அறிவித்தார். இதையடுத்து, ஷெரினா எலிமினேட் ஆகி வெளியேறினார். அவரின் எலிமினேஷன் அறிவிப்பை கமல் மலையாளத்திலேயே அறிவித்தார்.

கதறி அழுத ஆயிஷா
ஷெரினா வெளியேறியதை தாக்க முடியாமல் ஆயிஷா கதறி கதறி அழுதார். அவருக்கு பலரும் ஆறுதல் கூறினர். ஆனால், ஆயிஷா சமாதானம் ஆகவில்லை. அதே போல ஷெரினாவும் கண்ணீருடன் இந்த வீட்டுக்கு தனியாகத்தான் வந்தேன், தனியாகவே வெளியில் போகிறேன் என்று கண்ணீருடன், ஆயிஷாவை பார்த்துக்கொள்ளுங்கள் என்றுகூறிவிட்டு வெளியேறினார்.


Click it and Unblock the Notifications











