பிக்பாஸில் இந்த வார நாமினேஷன் லிஸ்ட்.. வெளியேற அதிக வாய்ப்புள்ள நபர் யார் தெரியுமா?

சென்னை : விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி 22 நாட்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார் வெளியேறி உள்ளனர்.

தற்போது, ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா, மணிகண்டன், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி, ஷிவின் கணேசன் என 18 போட்டியாளர்கள் உள்ளனர்.

இந்த வார நாமினேஷன் பிராசஸ் லிஸ்ட்டில் ஐந்து போட்டியாளர்கள் உள்ளனர். இதில் யார் வெளியேறப்போகிறார்கள் என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

விக்ரமன்

விக்ரமன்

பிக் பாஸ் சீசன் 6ல் விக்ரமன் கலந்துகொண்டு இருக்கிறார். இவர் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆவார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவரான விக்ரமன் கலந்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நடிகர், செய்தியாளர்,அரசியல்வாதி என பிக்பாஸ் வீட்டில் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார் விக்ரமன்.

விக்ரமனை பாராட்டிய கமல்

விக்ரமனை பாராட்டிய கமல்

முதல் வாரம் நடந்த ரேங்க் டாஸ்க்கின் போது அசீமுக்கும் விக்ரமனுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அசீம் வரம்பு மீறி விக்ரமனை போடா, வாடா என பேசியதால், இருவருக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. அசீம் என்னத்தான் கோபத்தில் ஒருமையில் பேசினாலும், விக்ரமன் வார்த்தையை விடாமல், கண்ணியமாகவே பேசினார். இதை சுட்டிக்காட்டி கமலும் விக்ரமனை பாராட்டினார்.

நாமினேஷனில் விக்ரமன்

நாமினேஷனில் விக்ரமன்

இந்த வீட்டில் அனைவர் இடத்திலும் அன்பாகவும், அதே நேரம் பேசுவது தவறு என்று தெரிந்தால் கண்டித்து வந்த விக்ரமனின் பெயர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் சிக்கி உள்ளது. காலையில் தொடங்கிய நாமினேஷனில் அசீம், ஆயிஷா, ஷெரினா, கதிரவன், விக்ரமன் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது.

டேஞ்சர் ஜோனில் யார்?

டேஞ்சர் ஜோனில் யார்?

நாமினேஷனில் விக்ரமனின் பெயர் இருந்தாலும், அவருக்கு மக்களின் ஆதரவு அதிகமாகவே உள்ளது. இந்த வாரம் டேஞ்சர் ஜோனில் இருப்பது ஷெரினா மற்றும் ஆயிஷாத்தான். ஷெரினா பொம்மை டாஸ்கில் கிழே விழுந்து போட்ட சீனை பார்த்து கடுப்பான மக்கள் நிச்சயம் அவரை இந்த வாரம் வீட்டை விட்டு வெளியில் அனுப்பி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X