Don't Miss!
- Sports
தோனியால் விக்கெட் கீப்பர்களின் நிலையே மாறிவிட்டது.. இனி வருவங்களாம் பாலோ பண்ணணும்.. டிராவிட் கருத்து
- News
புதுச்சேரியில் 'பிரீபெய்டு' மின் மீட்டர் ஒப்பந்தம்! பணம் கட்டிய பிறகு மின்சாரம்! த.வா.க. எதிர்ப்பு!
- Technology
iPhone கேமரா உடைந்தால் என்ன செய்வது? இது தெரியாம சர்வீஸ் கொடுத்தா பணம் போய்விடும்.!
- Finance
Pakistan: 24 வருடங்களில் இல்லாத வட்டி உயர்வு.. மக்கள் அதிர்ச்சி.. மீண்டு வர வழியே இல்லையா?
- Automobiles
இந்த காருக்கான புக்கிங்கை கேன்சல் செய்தால் ரூ2லட்சம் பணம்! ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ள செம ஆஃபர்!
- Lifestyle
சனி-சந்திர சேர்க்கையால் உருவான விஷ யோகம்: இந்த 3 ராசிக்கு பண இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு... உஷார்..
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
“அப்பா சாதித்துவிட்டேன்“ வெற்றியை மகனுடன் கொண்டாடிய அசீம்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6ன் டைட்டிலை தட்டித்தூக்கிய அசீம், தனது மகனுடன் வெற்றியை கொண்டாடினார்.
கடந்த ஆக்டோபர் மாதம் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த ஞாயிற்றுக்கிழமை மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இந்த சீசனில் கமல்ஹாசன் அடிக்கடி சொல்லும், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல அசீமின் வெற்றி அமைந்து இருந்தது.
பிக்
பாஸ்
சீசன்
6:
பையா
தள்ளி
நில்லு...
கமலின்
வேற
லெவல்
காஸ்ட்யூம்...
தெறிக்கும்
மீம்ஸ்கள்

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சண்டை, கோவம், ஆத்திரம், காதல், ரொமான்ஸ் என அனைத்தும் நிறைந்து இருந்தது. இந்த சீசனில் அதிகம் பேசப்படும் நபராக அசீம் இருந்தார். எதற்கு எடுத்தாலும் சண்டை, வாக்குவாதம் செய்த அசீமால் வீடே எப்போதும் ஹாட்டாக இருந்தது. இதனால், போட்டியாளர்கள் இவர் வெளியில் சென்றால் தான் நிம்மதி என நினைத்து அடிக்கடி நாமினேட் செய்தனர்.

11 முறை நாமினேஷன்
இதுவரை 11 முறை நாமினேஷனில் சிக்கிய அசீம் எலிமினேஷன் ஆகாமல் தப்பித்தார். அதற்கு காரணம் ஆடியன்ஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக செல்ல அசீம் இருக்க வேண்டும் என நினைத்து அவரை வாக்களித்து காப்பாற்றினார்கள். இதனால், வீருகொண்ட சிங்கம் போல மேலும் பலரை உதாசீனமாக பேசினார்.

அசீம் டைட்டில் வின்னர்
இதையடுத்து, அசீம்,விக்ரமன்,ஷிவின் மூன்று பேரும் பைனலுக்கு தேர்வான நிலையில், விக்ரமன் நிச்சயம் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிக வாக்குகளை பெற்ற அசீம், பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை தட்டித்தூக்கினார். இதையடுத்து, அசீமுக்கு, 50 லட்சம் ரூபாய் பணமும், ஆடம்பர காரும் பரிசாக வழங்கப்பட்டது.

அப்பா சாதித்துவிட்டேன்
இந்நிலையில் அசீம், தனது மகன் ரயானுடன் பிக் பாஸ் ட்ராபியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அதில், எனது உயரம் உனது இலக்கல்ல... நீ உயரனும் என்பதே என் இலக்கு.. இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம், என் செல்லமே, அப்பா சாதித்துவிட்டேன் ரயான் என்று கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.

மரியாதை தெரியாதவர்
அசீமுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வாழ்த்தி வரும் நிலையில், சில நெட்டிசன்ஸ் பிக் பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளரை அவமதித்த, மரியாதை கொடுக்கத் தெரியாத அசீமுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்தது, விஜய் டிவி பெரிய தவறை செய்து விட்டது என கடுமையாக விமர்சித்து கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர்.