பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே...அசீம் ஹாஷ்டேக் டிரெண்டிங்...பரபரப்பாகும் பிக் பாஸ் களம்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சற்று முன் கோலாகலமாக தொடங்கி உள்ள நிலையில், அசீம் ஹாஷ்டேக் சோஷியல் மீடியாவில் டிராண்டாகி வருகிறது.
கடந்த ஆண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கியது.
கடந்த சீசனைப்போல் இல்லாமல் இந்த சீசனில் பலர் தெரிந்த முகங்களாக இருந்தனர் இந்த சீசனில் தான் முதல் முறையாக அரசியல் பிரமுகரான விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் கலந்து கொண்டார்.

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கிய இரண்டாவது நாளிலேயே டீக்கு சண்டைப்போடத் தொடங்கிய அசீம், இந்த சீசன் முடியும் வரையும் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார். அசீம் நடந்து கொள்ளும் முறை வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்காததால் வாரம் தவறால் அசீமின் பெயரை நாமினேட் செய்தனர். ஆனால், சிறுத்தை சிக்கும் சிறு வண்டு சிக்காது என்பது போல எந்த நாமினேஷனிலும் சிக்காமலே இருந்தார் அசீம்.

ரெட் கார்டு கொடுங்கள்
குறிப்பாக அசீம் மற்றும் விக்ரமனுக்கும் இடையே ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. விக்ரமனை ஒருமையில் பேசியது,ஷிவினை இமிடேட் செய்து கிண்டலடித்தது போன்ற காரணங்களால் மக்கள் அவரை கடுமையாக விமர்சித்து ரெட் கார்டு கொடுத்து அனுப்ப வேண்டும் என்றும் இணையத்தில் அசீமுக்கு எதிராக போர் கொடி தூக்கினார். கமலும் ஆசீமை பல முறை கண்டித்தார்.

டைட்டில் யாருக்கு
ஆசீமுக்கு எதிராக எவ்வளவு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், அவை அனைத்தும் அவருக்கு மக்களின் ஆதரவாக மாறி இன்று டாப் த்ரீ பைனலிஸ்ட்டில் ஒருவராக இருக்கிறார் அசீம். கடந்த ஒருவாரமாகவே பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற சண்டையை இணையத்தில் ரசிகர் தொடங்கி விட்டனர்.

டிரெண்டாகும் ஹாஷ்டேக்
தற்போது, பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டிலை அசீம் வென்றுள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிவரும் நிலையில், #Azeem ஹாஷ்டேக்கை அசீமின் ரசிகர்கள் டிரெண்டாக்க வருகின்றனர். விக்ரமன் ரன்னர் அப் மற்றும் ஷிவின் இரண்டாவது ரன்னர் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிகமான வாக்குகளை அசீம் வெற்றிப் பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால், அசீம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றன.


Click it and Unblock the Notifications











