தோல்வியை தாங்க முடியாமல் பேசுகின்றனர்.. கடுமையாக விமர்சித்தவர்களுக்கு அசீம் சரியான பதிலடி!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலை வென்ற அசீம், இணையத்தில் வலம் வரும் விமர்சனங்களுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதிர் 3 லட்சம் ரூபாய் பணத்துடனும், அமுதவாணன் 11லட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணத்துடனும் வெளியேறினர்.
இறுதியில் பிக் பாஸ் வீட்டில் நான்கு போட்டியாளர்கள் இருந்த நிலையில் மைனா கடைசியாக எவிக்டாகி வெளியேறினார்.

பிக் பாஸ் சீசன் 6
அசீம், விக்ரமன், ஷிவின் வீட்டில் இருந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து சோஷியல் மீடியாவில் ஒரு பனிப்போரே நடந்தது. பெரும்பாலானோர் விக்ரமன் கண்ணியம் குறையாமல் வீட்டில் இருந்தவர்களிடம் நடந்து கொண்டதால், அவர் வெற்றியடைவேண்டும் என எண்ணி அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

பிக் பாஸ் தவறு செய்துவிட்டது
அனைவரும் விக்ரமன் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அசீம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால், பிக் பாஸ் பார்வையாளர்கள் டென்ஷன் ஆனார்கள். வாடா...போடா என்று சக போட்டியாளர்களை கொஞ்சம் கூட மதிக்காமல், அடாவடி தனமாக நடந்து கொண்ட அசீம் எப்படி வெற்றி பெற முடியும், சக மனிதனை மதிக்க தெரியாத ஒருவரை வெற்றிப் பெற செய்து பிக் பாஸ் பெரிய தவறை செய்து விட்டது என்று ரசிகர்கள் கொந்தளித்தனர்.

Boycott விஜய் டிவி
மேலும், விஜய் டிவிக்கு எதிராக Boycott விஜய் டிவி என்று ட்விட்டரில் டிரெண்ட் செய்து வரும் ரசிகர்கள் விக்ரமனுக்கு ஆதரவாக ஹேஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருக்கின்றனர். அதேபோல அசீமின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் #AbuserAzeem ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தோல்வியை தாங்க முடியாமல்
இந்நிலையில் அசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில்,எம் மக்களுக்கு வணக்கம்..சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம்.நம்மை நோக்கி சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்கள் தானே தவிர நம்மை தாக்கும் கற்கள் அல்ல.அதை படிக்கல்லாக பயன்படுத்தி நம் இலக்கை அடைவோம்.நம் இலக்கை அடைவோம்.நாம் செய்யப்போகும் நற்செயல்கள் பல நன்றி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











